மெரினாவில் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபாவின் கணவர்!

0
561

முதல்வர் ஜெயலலிதா இறந்து ஓராண்டகியுள்ள நிலையில், அவருக்கு தீபாவின் கணவர் மாதவன் திதி கொடுத்துள்ளார்.

உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி உயிரிழந்தார்ஜெயலலிதா. இதையடுத்து அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அ.தி.மு.க. தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டது. இதற்காக ஜெயலலிதாவின்  சமாதியில் நேற்று மெரினாவில் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபாவின் கணவர்!முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர்  பன்னீர்செல்வம், அ.தி.மு.க  நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

 

இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு இந்து மதத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு திதி கொடுக்கப்படவில்லை என்பதால் தீபாவின் கணவர் மாதவன் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதியின் பின்புறம் உள்ள இடத்தில் திதி கொடுத்தார். அப்போது அவர் ஜெயலலிதாவின் மூன்று தலைமுறையினரின் பெயரகளை சொல்லி திதி கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here