இழப்பு, பிரிவு, சோகம் போன்றவற்றை தரும் இந்த பொருட்கள் உங்க வீட்டில் இருக்கா? உடனே அகற்றுகள்!

0
2253

நாம் வாழும் இந்த உலகில் நல்ல சக்திகள் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நல்லது இருக்கும் இடத்தில் கட்டாயம் தீயதும் இருக்கும் அல்லவா? நமது வீட்டில் சில வகையான பொருட்களை வைப்பதன் மூலமாக எப்படி நல்லவை நடக்கும், அன்பு, செல்வம், அதிஷ்டம், உறவுகள் போன்றவை கிடைக்கும் என்று நாம் நம்புகிறோமோ அதே போல தான் சில வகையான பொருட்களை நாம் வீட்டில் வைப்பதன் மூலமாக நமது வீட்டில் எதிர்மறையான சக்திகள் சூழக்கூடும் என்பதையும் நாம் நம்ப வேண்டும்.

ஒரு சில பொருட்களை நீங்கள் வீட்டில் வைத்திருப்பதன் மூலமாக நமது வீட்டில் நேர்மறையான எண்ணங்கள் குறைகிறது. இதனால் நாம் செய்யும் காரியங்களில் தடைகள், மன சங்கடம் போன்றவைகள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், அந்த சக்தியை உருவாக்க கூடிய பொருள் என்னவென்று நீங்கள் கண்டறிந்து அதனை வீட்டை விட்டு அகற்ற வேண்டியது என்பது அவசியமாகும்.

பிடிக்காதவர்களின் பொருட்கள்

உங்களை பிடிக்காத நபர்கள் யாராவது உங்களுக்கு ஒரு பொருளை பரிசாகவோ அல்லது வற்புறுத்தியோ வைத்துக் கொள்ளுமாறு ஏதாவது ஒரு பொருளை கொடுத்திருப்பார்கள். அது போன்ற பொருட்களை நீங்கள் வீட்டில் வைத்திருப்பதால் உங்களது வீட்டில் எதிர்மறை சக்தி அதிகரிக்கும். எனவே நீங்கள் அந்த பொருளை வேறு யாருக்காவது பரிசாகவோ அல்லது தானமாகவோ கொடுத்து விடலாம்.

கத்திரிக்கோல்

நாம் அனைவரும் இயல்பாகவே செய்யும் தவறு என்னவென்றால், கத்திரிக்கோலை உபயோகப்படுத்திவிட்டு அதன் வாய்ப்பகுதியை திறந்த நிலையிலேயே வைத்து விடுவோம்.

அவ்வாறு வைப்பது என்பது கூடவே கூடாது. கத்திரிக்கோலை பயன்படுத்திய பின் அதன் வாய்ப்பகுதியானது மூடியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

போட்டோ பிரேம்கள்

உங்களது வீட்டில் உள்ள போட்டோ பிரேம்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டியது என்பது அவசியமாகும். உடைந்த, விரிசல் விட்ட போட்டோ பிரேம்கள் இருந்தால் அதனை உடனடியாக மாற்றிவிடுங்கள். உடைந்த போட்டோ பிரேம்களும் வீட்டில் இருந்தால் அது எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.

பழைய துணிகள்

உபயோகப்படுத்தாத பழைய துணிகளை நாம் எதற்காவது உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் வீட்டிலேயே வைத்திருப்பீர்கள். அதனை நீங்கள் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். அவைகளும் உங்களது வீட்டினுள் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும்.

இறந்த மிருகங்களின் பாகங்கள்

வீட்டின் அழகிற்காக, புலியின் தோல், மானின் கொம்புகள் போன்ற இறந்த மிருகங்களின் உடல் பாகங்களை நீங்கள் வீட்டில் வைத்திருப்பீர்கள். ஆனால் அவை உங்களது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும். எனவே அவற்றை வீட்டில் இருந்து அகற்றுங்கள்.

 

காய்ந்த பூக்கள்

வீட்டில் காயந்த பூக்களை வைத்திருக்க கூடாது. பிளவர் வாஷில் அடிக்கடி பூக்களை மாற்ற வேண்டியது அவசியமாகும். சாமி படத்தில் இருக்கும் பூக்களையும் மாற்றிவிட வேண்டியது அவசியமாகும். அதே போல செயற்கையான பூக்களையும் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். பிரஷ் ஆன பூக்களை வீட்டில் வைப்பது என்பது வீட்டில் நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்கும்.

கண்ணாடிகள்

வீட்டில் பழைய கண்ணாடிகள், உடைந்த கண்ணாடிகளை வைத்திருந்தால் அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அதே போல் வீட்டில் உள்ள கண்ணாடிகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.

முள் செடிகள்

வீட்டினுள் முள் உள்ள செடி வகைகளை வளர்க்க கூடாது. இது போன்ற செடிகளை வைத்திருந்தால், பணக்கஷ்டம், மன கஷ்டம், மகிழ்ச்சியின்மை போன்றவை உண்டாகும். எனவே இது போன்ற செடிகளை வீட்டினுள் வைத்திருந்தால் அகற்றி விடுவது நல்லது.

வாடிய செடிகள்

வாடிய நிலையில் உள்ள செடிகளை வீட்டில் வைத்திருக்க கூடாது. அவ்வாறு வாடிய நிலையில் உள்ள செடிகள் இருந்தால் அதனை உடனடியாக அகற்றி விட வேண்டியது அவசியமாகும்.

வால் போட்டோக்கள்

வால் போட்டோக்கள் எப்போதும் மன மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரக்கூடிய வகையிலேயே இருக்க வேண்டியது அவசியமாகும். இறப்பு, சோகம் போன்ற எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய போட்டோக்களை வீட்டில் வைத்திருக்க கூடாது.

அயர்ன் பாக்ஸ்

எப்பொழுதும் அயர்ன் பாக்ஸை நீங்கள் உங்களது படுக்கை அறையில் வைக்க கூடாது. அப்படி வைத்திருந்தால் கணவன், மனைவி இடையே ஆன அந்யோனியம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here