வீட்டில் செல்வம் பெருக, இதெல்லாம் மாலையில் செய்யக் கூடாது!

0
199

நமது இந்து சாஸ்திரத்தில் சில விஷயங்களை இந்த சமயத்தில் செய்ய வேண்டும், இந்த சமயத்தில் செய்யக் கூடாது என்று சொல்வார்கள். மாலை 6 மணிக்கு மேல் சில
விஷங்களை செய்யக் கூடாது என வீட்டில் பெரியவர்கள் கூறக் கேட்டிருப்பீர்கள்.

இதற்கு காரணம் என்னவென்றால் நியூட்டனின் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது என்பது போல், இவ்வுலகில் நல்ல சக்திகள் இருக்கிறது
எனும் பட்சத்தில் தீய சக்திகளும் இருக்கிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.

இருட்டியபின் துர்சக்திகள் உலவும் நேரம் அது. அவைகளை ஈர்க்கும் வகையில் நமது
செயல்களும் வீடும் இருந்தால் வீட்டில் துரதிர்ஷ்டம், எதிர்மறை நிகழ்வுகள் நடக்கும். ஆகவேதான் அவை நெருங்காதபடி மாலை ஆனதும் விளக்கு ஏற்றச் சொல்கிறார்கள்
வீட்டில் பெரியவர்கள்.

எவர் வீட்டில் லக்ஷ்மி வாசம் செய்கிறாளோ அங்கு தீய சக்திகள் நெருங்காது. அவ்வகையில் உங்களது வீட்டில் மாலையில்  செய்யக் கூடாத விஷயங்களைக் காணலாம்.

செய்யக் கூடாத விஷயங்கள் :

மாலையில் சூர்யன் அஸ்தமனம் ஆனபின் துளசிக்கு நீர் ஊற்றக் கூடாது. துரதிர்ஷ்டம் உண்டாகும்.

முடி சீவுதல் :

மாலை சூரியன் மறைந்த பின் , தலை முடியை வாருவதால் உதிரும் முடிகள் தீய சக்திகளை ஈர்ப்பவை. முடிகள் வசியம், மற்றும் சூனியம் வைக்க உபயோகப்படுத்துவது
இதனால்தான். ஆகவே வீட்டிற்குள் முடியை மாலை வேளையில் சீவக் கூடாது.

தட்டை கழுவாமல் இருப்பது :

இரவில் உண்டபின் தட்டை கழுவாமல், காபி குடித்த டம்ளரையோ அப்படியே வைத்தால் தீய சக்திகள் அதனை உண்ண உள் நுழையும். அவைகள் அங்கேயே தங்கி
உங்களுக்கு தீமைகளை விளைவிக்கும்.

வீடு பெருக்குதல் :

விளக்கேற்றியபின் வீடு பெருக்கக் கூடாது. இதனால் லஷ்மியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். வீடு பெருக்கும்போது செல்வத்தையும் சேர்த்து பெருக்குவது போலாகும்.

மாலையில் தூக்கம் :

மாலையில் தூங்கினால் லக்ஷ்மி தேவிக்கு பிடிக்காது என்பதால் அந்த வீட்டிற்கு மீண்டும் வர மாட்டாள் என்று கூறுகின்றனர். ஆகவே விளக்கேற்றிய பின் தூங்காதீர்கள்.

நகம் வெட்டுதல் :

மாலையில் நகம் வெட்டுதல் வீட்டில் நேர்மறை சக்தியை குறைக்கும் சக்தி உண்டு. இது செல்வத்தை குறைக்க வழி செய்யும். நகம் செய்ய்வாய் கிழமையில் வெட்டினால்
பணம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here