தீக்காயம் பட்டால் இதெல்லாம் செய்யவே கூடாது!!

0
1177

தீக்காயம் பட்டால் நமக்கு என்ன செய்வதென தெரியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்று செய்யச் சொல்வார்கள். சில சமயம், மிக சாதாரண சூட்டுக் காயம் கூட, சீழ் பிடித்து, மோசமான நிலைக்கு வந்து விடும்..அது ஆறுவதற்குள், கடுகடுவென வலி தாங்கவே முடியது.

முதலில் சூட்டுக் காயம் பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதை விட, எதைச் செய்யவேக் கூடாது என்பதை முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். வாங்க தனைப் பற்றி பார்க்கலாம்.

செய்ய கூடாதவைகள் :

 

ஐஸ் கட்டி :

நம்மில் நிறைய பேர், சூட்டுக் காயம் பட்டவுடன், உடனே ஐஸ் கட்டியை வைப்பார்கள். இது தவறு. ஐஸ் கட்டியின் மிக சில்லிப்புத் தமை பாதிக்கப்பட்ட செல்களை இன்னும் சேதப்படுத்தும். ஆகவே நேரடியாக ஐஸ் கட்டி வைப்பதை தவிருங்கள்.

எண்ணெய் :

சூடு பட்ட இடத்தில் எண்ணெய் தடவுவதால், இத இடையூறால், இயற்கையாக சருமத்தில் நடக்க வேண்டிய குணப்படுத்தும் முறைகள் தடுக்கப்படுகிறது. ஆகவே எண்ணெய் தடவாதீர்கள்.

 

கட்டுதல் :

சிலர் சூடுபட்ட இடத்தில் துணியால்,அல்லது பேண்டேஸ், பஞ்சு போன்றவற்றால் கட்டுவார்கள். இது மிகவும் தவறு. ஏனென்றால் காயம் பட்ட இடம் காற்றோட்டமாகத்தான் இருக்க வேண்டும்.அப்போதுதான் ஆறும். கட்டினால் காற்றோட்டம் இல்லாமல், கிருமித் தொற்று ஏற்படும்.

டூத் பேஸ்ட் :

சிலர் டூத் பேஸ்ட் பயன்படுத்துவரகள். டூத் பேஸ்ட்டிலுள்ள காரத் தன்மை, புண்ணை இன்னும் தீவிரப்படுத்தும்.

டால்கம் பவுடர் :

நம்மில் நிறைய பேர் செய்யும் தவறு இது. சூடு பட்ட இடத்தில் உடனே பவுடர் அல்லது லோஷன் தடவுவார்கள். சூடு படும் போது உடனடியாக சேதம் அடைந்த செல்கள் ஆக்ஸீஜனை சுவாசிக்க நினைக்கும். ஆனால் பவுடர் மற்றும் லோஷன் போடும் போது, அவை சரும துவாரங்களை அடைத்துக் கொண்டு, சூட்டுக் காயத்தை அதிகப்படுத்தும்.

செய்ய வேண்டியவை :

தேன் :

தேன் இருந்தால் தேனை தடவலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் காயம் பட்ட செல்களை ஆற்றும். சூட்டின் வலியை குறைக்கும்.

Combination of aloe vera gel, honey and rock salt

கற்றாழை :

கற்றாழை ஜெல்லை எடுத்து பூசலாம். இதுவும் தேன் போலவே சூட்டுக் காயத்தின் வீரியத்தைக் குறைக்கும்.

உப்பு :

பொடி உப்பை தடவுங்கள். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் காயம் பட்ட இடத்தில் இன்ஃபெக்ஷன் வராமல் தடுக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here