வீட்டில் செல்வம் சேர செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள்!!

0
101

உலகில் எல்லாரும் பணத்திற்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணம் இருப்பவன் நிம்மதியாக இருக்கிறானா என்ற கேள்வி எல்லாருக்கும் பொருந்தாது. பணம் என்ற ஒற்றைத் தேவையினால்தான் பலரும் தங்களுடைய சுகதுக்கங்களை தொலைத்துவிட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதி என்பது நம் மனதினுள் இருப்பதுதான் என்றாலும் பணத் தேவையை ஒதுக்கி வைத்துவிட முடியாது.

என்ன சம்பாதித்தாலும் பணம் தண்ணியா செல்வாகுதே, வரவுக்க்கு மீறி செலவு
இடிக்குதே எனச் சோர்ந்து போகிறவர்கள் ஒரு நிமிடம் இந்த கட்டுரையை படியுங்கள்.
இங்கு செல்வம் நிலையாக தங்க நேர்மறை எண்ணங்களை எப்படி உருவாக்கலாம் என
அனுபவம் வாய்ந்தவர்களின் குறிப்புகளிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. படித்து பயன்
பெறுங்கள்.

உங்கள் வலது உள்ளங்கையில் லஷ்மி வாசம் செய்வதால், தினமும் காலையில்
எழுந்தவுடன் உங்களது வலது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும்.

செய்யக் கூடியவை :

1.சிவன், பரவதி, வினாயகர், முருகன் சேர்ந்து உள்ள படத்தை கிழக்கு பார்த்து
வைத்தால், வீட்டிலுள்ள வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்யலாம்.

2. வீட்டில் நிலைப்படிகளில் மஞ்சளும், குங்குமம் வைத்து வர வேண்டும். இதனால்
விஷ ஜந்துக்கள் மற்றும் தீய சக்திகளை வீட்டிற்குள் தடுக்க முடியும்.

 

3. வீட்டில் கிழக்குப் பக்கம் துளசிச் செடி அல்லது வேப்ப மரம் இருந்தால் மிகவும்
நல்லது. தீய சக்திகளும் எதிர்மறை செயல்களும் உங்களை அண்டாது.

4. நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய்,
விளக்கெண்ணெய், நல்லென்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவை
எண்ணெயில் 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் மந்திர சக்தியும், செல்வமும்
கொழிக்கும்.

செய்யக் கூடாதவை :

1. பூஜையறையில் உடைந்த அல்லது வீணான் பொருட்களை வைக்காதீர்கள். அது
இறைசக்தியை குறைக்கும்.

2. அமாவாசை, பௌர்ணமி மற்றும் ஜென்ம நட்சத்திரம் அன்று எண்ணெய் தேய்த்து
குளிக்கக் கூடாது. அன்று கோலம் போடுதலும் கூடாது.

3. சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை சூட்டக் கூடாது.

4. வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது தீபம் ஏற்றக் கூடாது/ அவர்கள்
எழுந்தவுடன் அல்லது எழுப்பியவுடன்தன தீபம் ஏற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here