காதலை பற்றிய இந்த விஷயங்களை இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்!

0
53

காதல் பற்றிய ஏராளமான பதிவுகளை நீங்கள் புத்தங்கள் அல்லது இணையம் வாயிலாக படித்திருப்பீர்கள்.. ஆனால் இவை உங்களது காதலை மேம்படுத்த மட்டுமே உதவும்.. உண்மையில் இவை காதல் பற்றி ஆழமாக கூறி இருக்கின்றனவா?

இன்று உலகம் முழுவதையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் ஒரே நோய் காதல் தான்.. இந்த நோய் தாக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.. இந்த காதல் நோய் வரவில்லையே என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் கூட ஏராளம்.. காதல் ஒருவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும், வேதனையை கொடுக்கும், உணர்ச்சி வயப்படுத்தும், பயம் கொள்ள செய்யும்…. இதை எல்லாம் தாண்டி காதல் பற்றி அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.. இந்த நுணுக்கத்தை மட்டும் தெரிந்து கொண்டால் நீங்கள் உண்மையிலேயே ஒரு காதல் மன்னன் ஆகவும் வாய்ப்புள்ளது.

இரண்டு காதலர் தினம்

நமது நாட்டில் ஒரே ஒரு காதலர் தினம் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதற்கே ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்புகிறது. ஜப்பானில் காதலர் தினம் மற்றும் ஒயிட் டே என்று இரண்டு கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று பெண்கள் ஆண்களுக்கு பரிசுகளை கொடுக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து ஒயிட் டே என்று வரும் அப்போது ஆண்கள், தன் காதலிக்கு பரிசுகளை வாங்கி கொடுத்து மகிழ்விக்க வேண்டுமாம்…!

காதல் போதை

காதல் என்பது ஒரு போதை. காதல் நோயால் பாதிக்கப்பட்டவரும்.. போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவரும் ஒரே மாதிரி தான்.. இரண்டும் போதை தரும். விடுபடுவது மிக மிக சிரமமான ஒன்றாகும்.

அலைய கூடாது

உங்கள் துணையின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தால் அவருக்கு உங்கள் மீது வெறுப்பு தான் உண்டாகும். எனவே சற்று கண்டு கொள்ளாமல், உங்களது வேலையையும் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்தாலே காதல் கை கூடும். வேண்டாம், வேண்டாம் என்று சொல்பவரை தான் காதல் தேடித்தேடி வருமாம்.

romantic love wallpaper

 

மோதிர விரல் தெரபி

மோதிர விரலானது நேரடியாக இதயத்துடன் தொடர்புடையது என்று மக்களிடையே ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் அறிவியல் எந்த ஒரு நரம்பும் நேரடியாக இதயத்துடன் தொடர்பில் இல்லை என்று கூறுகிறது.

முதல் சந்திப்பில் காதல்

முதல் சந்திப்பிலேயே காதல் என்பதை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்றால், ஒருவரை பார்த்தவுடன் நமது மூளை இவரை நமக்கு பிடிக்குமா, பிடிக்காதா என்ற தகவலை சேமித்து வைத்து விடுகிறது. அந்த நபர் பருவ வயதில் இருந்தால், அது கண்டவுடன் காதல் ஆகிறது.

கவன சிதறல்

ஒரு விஷயத்தில் நாம் அதிகப்படியான கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்களின் மீதான கவனம் குறைகிறது. அதே போல தான், ஒருவர் மீது மட்டுமே நமது கவனம் அனைத்தும் செல்லும் போதும், அவரையே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, நமக்கு மற்ற விஷயங்களின் மீது கவனக் குறைவு உண்டாகிறது. இதுவே படிக்கும் வயதில் காதலித்தால், படிப்பில் முன்னரை போல கவனம் செலுத்த முடியாமல், குறைந்த மதிப்பெண்ணையே எடுக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here