“இதெல்லாம் செய்யாத” என ஆண்கள் மனைவியின் வெறுப்பை சந்திக்கும் விஷயங்கள்!!

0
3742

மனைவிகிட்ட எப்படி நடந்துக்கிறதுன்னே நிறைய பேருக்கு தெரியறதுல்ல. ஆண்கள் எல்லாமே மூளையோட அணுகற விஷயங்களை பெண்கள் உணர்வுபூர்வமாகத்தான் அணுகுவாங்க. ஆனா இதெல்லாம் தெரிஞ்சுக்காம, இந்த பொன்ணுங்களை புரிஞ்சுக்கவே முடில்லன்னு புலம்பற ஆண்கள்தான் இந்த உலகத்துல அதிகம்.

சில விஷயங்கள் அப்படித்தான்.. எங்கோ செல்லமா வளர்ந்து, தனது ரத்த உறவுகள் மற்று பழகிய இடத்தை விட்டு, வேறு பழக்க வழக்கம், குணங்கள் கொண்ட புதிய உறவு வாய்த்த வீட்டுக்கு வந்து உங்களை, உங்கள் வீட்டு ஆட்களை அனுசரித்து போகிறவளை நீங்கள் சிலவற்றை புர்ந்து நடந்து கொண்டால்தன உங்கள் வீட்டில் உள்ளவர்களீடமும் அவள் பாசமாக நடந்து கொள்வாள்.

அப்படி உங்கள் மனைவிக்கு சில விஷயங்களை பொதுவாக இப்படி சொன்னால் பிடிக்காது. அப்படி என்ன மாதிரியான விஷயங்கள் தெரியுமா?…

அம்மா மாதிரி :

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. எதற்கெடுத்தாலும் “எங்கம்மா அப்படி பண்றாங்களே. நீ யும் கத்துக்கோ” என எல்லாவற்றையும் நீங்கள் ஒப்பிடக் கூடாது. அவங்க அனுபவம் வயசு வேறு, இவங்களது வேறு.. இதைக் கேட்டு உங்கம்மா வேணுமானாலும் சந்தோஷம் படலாம். ஆனால் மனைவி.. செம காண்டாவாங்க.. அம்மாவோட குணாதிசயம் மகளுக்கு வேண்டுமானலும் மரபணுப்படி வரலாம். வந்த மருமகள்ட்ட எதிர்ப்பார்க்கலாமா?

ஆலோசனை :

அவர்கள் ஏதாவது ஆலோசனை சொன்னால்,” அதெல்லாம் நான் பாத்துக்கறேன், பெரியவங்க இருக்கங்கல்ல. உன்ன ஏதாவது கேட்டா நீ பதில் சொல்லு” என்று சொல்வது. இது அவர்களின் உரிமையை பறிப்பது. இதனால் அவர்கள் உங்கள் குடும்பத்துட்ன ஒட்டாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம்.

குழந்தை வளர்ப்பு :

குழந்தை ஏதாவது தப்பு செய்தால் ” நீ வளர்த்த குழந்தைதானே… அதன இப்படி நடந்துக்கறாள்/ன்”. என்று சொல்வது.

அவர்கள் ஏதாவது நல்லது செய்தால், “எம்பிள்ளை அதான் அப்படி” என்று உச்சி முகர்வதும், தப்பு செய்தால் அம்மாவின் வளர்ப்பை குறை சொல்வதும்? என்னங்க பாஸ் நியாயம்..

தோற்றம் :

உங்கள மாதிரி அவங்க உடல் வாகு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. உங்களுக்கு மன்த்லி ப்ராப்ளம் கிடையாது. கர்ப்பமாவது இல்லை. குழந்தை பெத்துக்கறதும் இல்ல ஹார்மோன் மாற்றங்களும் இல்லை. அதனால்தன நீங்க எப்பவு ஒரே மாதிரி இருக்கீங்க. ஆனா பொண்ணுங்க அப்படியா? அவங்க மனசளவும், உடம்பளவும் மாசமாசம் ஏதாவது பிரச்சனை சந்திச்சுட்டுதான் இருப்பாங்க.

“கல்யாண ஆன டைம்ல சிம்ரன் மாதிரி இருந்த.. இப்போ குண்டு கல்யாணம் மாதிரி ஆயிட்டன்னு” சும்மா எப்பவும் குறை சொல்றத விட்டுட்டு அவங்க இளைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணுங்க..

ட்ரெஸ் :

“இதுவா போடற.. அம்மா மாதிரி நடந்துக்கோ. இதெல்லாம் போட நீ 16 வயசு பொண்ணு இல்ல தெரிஞ்சுக்கோ”- ன்னு சொல்றது.  என்ன சார் நடந்துச்சு? அவங்க குழந்தை பெத்துக்கிட்டா அவ்ளோதானா? அவங்க வாழ்க்கையே முடிஞ்சிடுச்சா? நீங்க நிஜமா கட்டுப்பெட்டியான அப்பா மாதிரி நடந்துக்கிறீங்களா? இல்லைல்ல. அப்போ அவங்களுக்கு மட்டும் என்ன தடை.. அவங்களுக்கும் உணர்வு இருக்கும்னு தெரிஞ்சுகோங்க சார்.

Couple Staring

மதிப்பு :

அவங்க உங்ககிட்ட ஒரு விஷயம் செய்ய சொல்லிருப்பாங்க. நீங்களும் செய்யறதா ப்ராமிஸ் பன்ணிட்டு வார, மாத வருடக் கணக்கில் அவங்க சொன்ன விசயத்தை பொருட்படுத்தாம காத்துல பறக்கவிட்ருவீங்க. அவங்களுக்கு மதிப்பு கொடுத்தா , அக்கறை இருந்தா அவங்க சொல்ற விஷயத்தை அக்கறையோடு செஞ்சு முடிச்சிருப்பீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here