செல்வம் பெருக சிவனுக்கு இந்த பொருட்களை வைத்து பூஜியுங்கள்!!

0
1242

சிவன் என்றாலே ருத்ரம் என்று சொல்வார்கள். ஆனந்தத்தில் கூட தாண்டவமாகத் தான் ஆடுவார். அழிக்கும் சக்தி படைத்தவர் என்பதால் சிவன் என்றாலே பயம் கொள்கிறோம். ஆனால் உண்மையில் சிவன் சாந்தமானவர். சலனமற்ற மனதைதான் சிவனின் உருவம் குறிக்கும். அவர் இருக்கும் தலங்களில் பெரும்பலும் இந்த அமைதியை காணலாம். காசி, ராமேஸ்வரம் போன்ற்ற தலங்களில் ஒரு வித அமைதியை நீங்கள் தேட முறபடலாம்.

சிவன் தீயவர்களுக்கும், பாவம் செய்பவர்களுக்கு மட்டுமே சிம்ம சொப்பனாமாக இருப்பார். அசுரர்களும், அரக்கர்களும் அவரை கண்டு அஞ்சியது அவருக்குதான். ஆனானப்பட்ட சனீஸ்வரனே சிவனின் சொல்லிற்கு கட்டுப்பட்டவர்.

சிவனுக்கு மஞ்சள், குங்குமம் போற்ற பொருட்களை வைத்து வழிபடுதல் கூடாது என முந்தைய ஒரு கட்டுரையில் பார்த்தோம். இப்போது சிவனுக்கு உகந்த பொருட்கள், அவருக்கு பூஜை காலத்தில் வைத்து பூஜிப்பதால் செல்வம் பெருகும். வீட்டில் சகல நன்மைகளையும் அள்ளி தருவார். வாழ்வில் முன்னேற்றமே காண்பீர்கள்.

முக்கியமான சிவனுக்கு உகந்த நாள் திங்கள் கிழமை மற்றும் பிரதோஷ நாட்கள் .அந்த நாட்களில் சிவனுக்கு பிடித்த பூஜைப் பொருட்கள் வைத்து, பூஜை செய்யும்போதூ வீட்டில் சுபிட்சம் உண்ட்டாகும் என்பது திண்ணம். இப்போது எந்த மாதிரியான பூஜைப் பொருட்கள் வைத்து பூஜிக்கலாம் என்று பார்க்கலாம்.

தயிர்:

உங்கள் வாழ்வில் துரத்ஷ்டமே அதிகமாக நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? சிவனுக்கு தயிரைக் கொண்டு பூஜியுங்கள். தயிரை சிவனுக்கு படைப்பதால் உங்கள் வாழ்க்கையில் அமைதி, அங்கீகாரம் போன்றவைகள் உண்டாகும். பிரச்சனைகள் ஓடி விலகி விடும்.

வெண்மை :

சிவனுக்கு பிடித்த நிறம் வெள்ளை. வெள்ளை நிற மலர்களான வெண் தாமரை, மகிழம் பூ, நாகலிங்க பூ, பாரி ஜாதம் போன்ற வெண்ணிற பூக்கள் அல்லது பொருட்கள் கொண்டு பூஜை செய்வதால் செல்வம் பெருகும்.  தடங்கல்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றங்கள் வரத் தொடங்கும்.

சிவமந்திரங்கள் :

ஒரு செம்பு அல்லது வெண் கல பாத்திரத்தில் சுத்தமான நீரை எடுத்து லிங்கத்திற்கு சிவ மந்திரங்களை உபன்யாசம் செய்து பூஜித்தால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். தடைகள் நீங்கும். ஏனென்றால் சிவனுக்கு அவரை பூஜிக்கும் சிவமந்திரங்கள் மிகவும் விருப்பமானதாக இருப்பதாக சிவ புராணத்தில் கூறப்படுகிறது.

சந்தனம்

சிவனுக்கு மிகவும் பிடித்த பொருட்களில் ஒன்று சந்தனம். சிவனுடைய கோபத்தையும் ரௌத்திரத்தையும் சந்தனம் குளிர்ச்சியாக்கும் என்பதால் சந்தனத்தால் சிவனின் லிங்கத்தை பூஜிப்பதால் நன்மைகள் உண்டாகும். உங்கள் கெட்ட பெயர் விலகி உங்களுக்கு புகழ் பெற்றுத் தரும்பட்டியான நல்ல விஷயகள் நடக்கும்.

குங்குமப்பூ :

குங்குமப் பூ தெய்வீக மலர்களில் ஒன்றாக பொருவாக கருதப்படுவதில்லை. ஆன்மீகத்தில் அது அரிதாக பயன்படுகிறது. ஆனல சிவனுக்கு பிடித்த பொருட்களில் குங்குமப் பூவும் இடம் பெற்றுள்ளது.. குங்குமப் பூவை சிவனுக்கு படைத்து உங்கள் வாழ்வில் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும் என்பதில் ஐயமில்லை.

வில்வ இலை :

சிவனுக்கு வில்வ இலை மிகவும் விருப்பமான பூஜைப் பொருள். வில்வ இலையால் ச்சிவ ராத்திரி அல்லது விசேஷமான திங்கள் கிழமையில் வைத்து வண்ங்கும் போது பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

சர்க்கரை :

சர்க்கரை இனிமையை குறிக்கும். சிவனுடைய விருப்ப பூஜைப் பொருட்களில் சர்க்கரையும் அடக்கம். சர்க்கரையை சிவ ராத்திரி, திங்கள் கிழமைகள் அல்லதி பிரதோஷ நாட்களில் வைத்து பூஜை செய்வதால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். வறுமை நீங்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here