எழுத்தாளர் பாலகுமாரன் பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்கள்!!

0
2476

எழுத்தாளர் பாலகுமாரனை தெரியாதவர்கள் தமிழ் நாட்டிலேயே இருக்க முடியாது. எழுத்துச் சித்தரான பாலகுமாரன் கதைகளுக்காக மிகப்பெரிய ரசிக பட்டாளம் இப்போதும் உண்டு. இன்றும் அவரை முன்னோடியாக வைத்து எழுதத் தொடங்குபவர்கள் கணக்கிலடங்கோர்.

ஏராளமான கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியுள்ளார். சினிமா உலகிலும் வெற்றிக் கோலை அச்சிட்டவர். நாயகன்,
குணா, ஜெண்டில்மேன் என பல அற்புத படைப்புகளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். உதவி இயக்குனராகவும் இருந்தார். இறக்கும் வரை எழுத்தை விடாமல் எழுதிக் கொண்டிருந்தார்.

எழுத ஆரம்பித்த வயது

அவர் 20 வயதில்தான் எழுதவே ஆரம்பித்தார். அதுவும் அவர் முதலில் ஆரம்பித்தது கவிதைதான். அதன் பின் 28 வயதில்தான் கதையையே எழுத ஆரம்பித்தார். ஆரம்பித்தில் கவிதையிலிருந்து கதைக்கு போகும்போது உண்டான சாவல்களை வென்று வெற்றியும் கண்டார். நாற்பது ஆண்டுகளும் மேல் எழுதிக் கொண்டிருந்தார்.

அவருக்கு நாட்டம் எதில் தெரியுமா?

அவர் இதுவரை 260 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தீவிர வேலைவிரும்பி. அற்ப விஷயங்களிலும், வெட்டிப் பேச்சுகளிலும் அவருக்கு ஈடுபடப் பிடிக்காதாம். அதனாலேயே தனக்கு நண்பர்கள் கிடையாது என ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

வேலை?

எழுத்தின் மீதிருந்த தீவிர காதலாம் அவர் பாத்துக் கொண்டிருந்த ட்ராக்டர் கம்பெனி வேலையை விட்டுவிட்டார். அவரின் இரு மனைவிகளும் அரசாங்க வேலையில் இருந்ததால், அவருக்கு வேற கவனம் சிதறாமல் எழுத முடிந்திருக்கிறது.

காமம் பற்றி :

பாலகுமாரன் என்றாலே அவரின் காமம் கலந்த கதைகளைப் பற்றிஇலக்கியவாதிகளும், இன்னும் பலரும் எள்ளி நகையாடுவதுண்டு. அவகளுக்கு பாலகுமாரன் தந்த பதிலடி என்ன தெரியுமா?

எழுத்தாளனுக்கு காதலும் காமும்தான் உந்துவிசை. இதில் நானும் அடக்கம்தான். காமம் என்பது ஒரு அழகான விஷயம். ஒரு மருந்து. அதை தலையில் கொட்டிக் கொள்ளக் கூடாது. 2 ஸ்பூன் சாப்பிடனும்.

ஆனால் எழுத்தில் காமம் இருந்தால் அதனை ” ச்சி..தூ என்று சொல்பவர்கள் உண்டு. உண்மையில் அவர்கள்தான் அதிகம் வசப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அதாவது”நான் ஏற்கெனவே இரண்டுங்கெட்டானா இருக்கேன். இந்தக் கர்மம் பிடிச்சவன் இதை வேற எழுதி நம்ம காமத்தைத் தூண்டித் தொலையறான்’என்கிற கோபத்தினாலதான்.

சினிமாவில் ஜெயித்தாரா?

சினிமாவில் டைட்டில் கார்டில் வசனம்- பாலகுமாரன் என்று அவருடைய பெயர் வரும்போது தியேட்டரில் விசில், கைத்தட்டல்கள் பறக்கும். இப்படியான கைத்தட்டல் ஒரு எழுத்தாளராக தனக்குதான் முதன்முதலாக கிடைத்ததாக பெருமைப்பட்டிருக்கிறார்.

இவருக்கும்- பாக்யராஜுக்கும் வந்த லடாய் ;

இவர் பாக்ய ராஜின் இது நம்ம ஆளு படத்தொய்ற்கு உதய இயக்குனாரக பணி புரிந்த போது சில கசப்பான அனுபவங்களை பெற்றிருக்கிறர. அப்போது பாக்யராஜ் புகழின் உச்ச கட்டத்தில் இருந்தார். அவருக்கென ஒரு கூட்டம் .

பாக்யராஜ் மிகவும் கெட்டிக்காரராக இருந்ததால் அவர் இழுத்த இழுப்பிகெல்லாம் போக முடியாமல் அப்போது மோதல் ஆரம்பித்திருக்கிறது. மனச் சிதைவை அந்த சமயத்தில் சந்தித்திருக்கிறார்.

டைரக்ட் செய்ய வேண்டும் என்ற கனவு:

ஆரம்ப காலத்தில் சினிமா டைரக்ட் செய்ய வேண்டும் என்ற கனவு பாலகுமரானுக்கு இருந்திருக்கிறது. பின்னர் அவருக்கு நாட்டம் குறைந்து சினிமவாவை பற்றி பேசுவது கூட நின்றிருந்தது. அவருக்கு அதன் பின் எழுத்து மட்டுமே உலகமாயிருக்கிறது.

Objects of the film industry, the concept of cinema.

சரித்த நாவல் எழுதியதற்கு காரணம்

16 வயதில் தஞ்சை பெரிய கோவில் பார்த்த பிரமிப்பு அவருக்கு எப்போதும் இருந்திருக்கிறது. சுரணையுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சரித்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளும் முனைப்பு இருக்கும். நம் முன்னோர் யார், என்ன பாரம்பரியம்? மொழியின் பலம் , பலவீனம் என்ன? என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போது சரித்திரம் பற்றிய ஆச்சரியங்கள் விரிவடைந்து கொண்டு போகிறது.

தஞ்சை கோவிலின் பாதிப்பில்தான் கங்கை கொண்ட சோழன்,உடையார் போன்ற சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here