சகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

0
987

இன்றிலிருந்து நவராத்திரி ஆரம்பமாகி விட்டது. இனி ஒன்பது நாட்களும் புதுப் புது நெய்வேத்தியங்களுடன் மாலைகள் தொடங்கும். நிறைய பேர் வீட்டில் கொலு
ஐப்பார்கள். ந்த ஒன்பது நாட்களும் வீட்டில் மாலை வேளையில் அக்கம் பக்கம் இருப்பவர்களிய அழைத்து பாடச் சொல்லி, பிரசாதம் கொடுத்து மகிழ்விப்பார்கள்.

பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பண்டிகையாக இந்த நவராத்திரி விலங்குகிறது. ஒன்பது அல்லது அவரவர் வசதிக்கு ஏற்ப ஒற்றை வரிசையில் பல படிகளிய வைத்து அலங்கரிப்பார்கள். வீட்டிற்கு வரும் பெண்களை அம்பாளாகவே நினைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து மகிழ்விப்பார்கள்.

நவராத்திரியின் முதல் 3 நாட்கள் வீரம், தைரியம் கிடைக்க பராசக்தியை வழிபட வேண்டும், அடுத்த 3 நாட்களில் வீட்டில் தடையில்லாத நிம்மதி மற்றும் செல்வம் பெருக மஹா லட்சுமியை வணங்க வேண்டும். அதற்கு அடுத்த 3 நாட்கள், கல்வி, ஞானம், அறிவு, சகல வித்தைகளில் சிறந்து விளங்க சரஸ்வதியை வணங்க வேண்டும்.
இது தென் மானிலங்களில் கடைபிடிக்கும் சம்பிரதாயங்கள். வட மானிலத்தில் துர்கா தேவிக்கென அந்த ஒன்பது நாட்களும் கோலாகாலமாக கொண்டாடுவார்கள்.

நவராத்திரி வரலாறு :

சோழர் காலத்தில்தான் முதன் முதலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அது அரசு விழாவாக முதலில் ஆரம்பிக்கப்பட்டது . அந்த நவ ராத்திரி சமயத்தில் மக்களீடம் வரி வசூலிக்கும் நடைமுறையிய விஜய நகரப் பேரரசு ஏற்படுத்தியதும். அந்த சமயத்தில் நமது தமுழ் நாட்டில் அரசர் பரம்பரையிலிருந்து நாயக்கர் மற்றும் மக்கள் என பரவாலக கொண்டாட ஆரம்பித்தனர்.

அதற்கு முன் நவராத்திரி விழாவை பெரிய தனக்காரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை பெற்றிருந்தார்கள். ராமநாதபுரம் சேதுபதி மன்னர் நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். அவர்கள் பின்னர் மக்கள் கொண்டாட வழி வகுத்தனர். இப்படித்தன தமிழ் நாட்டில் நவ ராத்திரி கொண்டாட ஆரம்பித்தனர்.

நவராத்திரி கொண்டாட விதி முறைகள் :

நவராத்திரி நாட்களில் இரவு சமயம்தான் விசேஷமே. ஆகவே 7 மணி முதல் 9.30 மணி வரை அம்பாளை பூஜிப்பதால் விரும்பும் நன்மைகள் கிடைக்கும். புரட்டாசி மாதத்தை எமனின் மாதம் என்பதால் எமனிடமிருந்து தப்பிக்கவும், சிவன் பார்வதியின் அருள்பெறவுமே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி காலத்தில் சிவன் பார்வதி இருவரும் சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற திருக் கோலத்தை ஒன்பது நடகளும் தரிசனம் செய்தால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

வீட்டில் பகல் பொழுதில் சிவனுடைய வழிப்பாடும், இரவில் அம்பாளின் வழிபாடும் செய்வதே நவ ராத்திரியின் வழிபாட்டு முறையாகும்.
நவராத்திரி நாட்களில் கோலப் பொடி மற்றும் சுண்ணாம்பினால் கோலம் போடக் கூடாது. அரிசி மாவினால் மட்டுமே கோலம் போட வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் ஒற்றுமையும், செல்வமும் அதிகரிக்கும் என்று இந்து சாஸ்திரம் கூறுகின்றது.

ஒன்பது நாட்களிலும், நமக்கு உறவில்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். அவர்களையே துர்கை அம்மனாக நினைத்து அழைத்து வந்து அவர்களை உபசிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளை தேர்ந்தெடுக்கக் கூடாது.

நவராத்திரி சமயத்தில் ஏழைகளுக்கு, மங்கலப் பொருட்கள் கொடுப்பது மிகவும் நன்மைகள் வாரித் தரும். எட்டில் நேர்மறை எண்ணங்கள் வளர அருள் கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here