இதை எல்லாம் தெரிஞ்சு வைத்திருக்கும் ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்குமாம்!

0
64

இன்றைய நவீன யுக பெண்கள், தனக்கு தகுந்த ஆண் துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்கிறார்கள். முந்தைய கால கட்டத்தை போல இல்லாமல், இன்றைய கால கட்டத்தில் இருக்கும் பெண்கள், ஆண்களுக்கு நிகராகவும், பல பெண்கள், ஆண்களே பார்த்து பொறாமைப் படும் அளவுக்கும் வளர்ந்து வருகின்றனர்.

முன்பெல்லாம் ஆண்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் தான் ஒரு பெண் இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத சட்டம் இருந்தது. இப்போது பெண்ணை கவர ஆண்கள் பலவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆண்கள் அப்படி எந்த வித்தைகளை எல்லாம் கற்று வைத்திருந்தால் ஒரு ஆணுக்கு அந்த பெண்ணை பிடிக்கும் என்பது பற்றிய ஒரு பதிவினை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

கொஞ்சல்கள்!

பெண்களுக்கு எந்த வயது ஆனாலும் அவர்களது கணவர் அவர்களை குழந்தை போல தான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.. எனவே காலையில் எழுந்ததும் பெண்களை தங்கம்.. செல்லம் என்று உங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி கொஞ்சி விளையாடுங்கள். அதே போல இரவிலும் செய்யுங்கள். அலுவலகம் முடிந்து வந்த உடன் உங்களது மனைவியை கொஞ்சுங்கள்.. அலுவலகம் செல்லும் போதும் கொஞ்சுங்கள்.. இப்படி செய்து கொண்டே இருந்தால் உங்களது மனைவியின் மனதில் நீங்காத இடம் பிடித்து விடலாம்.

கட்டிப்பிடிப்பது

பெண்களுக்கு தங்களை தன் கணவன் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். கட்டிப்பிடிக்கும் போது மனது லேசாகிறது.. உறவு மிகவும் பலமாக ஆகிறது. எனவே அடிக்கடி உங்களது மனைவியை கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்.

கோபமும் வேண்டும்!

கோபமே பாடாமல் ஒரு ஆண், சொன்னதுக்கு எல்லாம் ஆமாம் சாமி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.. கோபப்பட்டாலும் கூட கடைசியில் பெண்களை சமாதானப்படுத்தும் வித்தையை கற்று வைத்திருக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.

அறிவான ஆண்கள்

ஆண்கள் எப்போதுமே அவர்கள் எடுக்கும் முடிவில் தெளிவாகவும், தீர்க்கமாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். வாழ்க்கை என்று வரும் பொழுது அறிவு சார்ந்த முடிவுகளை எடுக்கும் தெளிவான ஆண்களை தான் பெண்கள் விரும்புகிறார்கள். மதில் மேல் பூனையாய் இருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது இல்லை..

சாப்பாட்டு பிரியர்

நன்றாக சுவைத்து சாப்பிடும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிலும் தான் சமைத்த உணவை தன் கணவர் சுவைத்து சாப்பிடுவதை பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.

சூப்பர் மேன் ஆண்கள்!

ஆண்கள் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் டிவி தெரியாமல் போனால் சரி செய்வது, சின்ன சின்ன அன்றாட பிரச்சனைகளில் இருந்து, பெரிய பெரிய வாழ்க்கை பிரச்சனைகள் வரையில் அனைத்தையும் துல்லியமாக சரி செய்யும் திறன் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். எனவே இது போன்ற விஷயங்கள் எல்லாம் தெரியவில்லை என்றால் சீக்கிரமாக கற்று வைத்துக் கொள்ளுங்கள் ஆண்களே…!

சுட்டியாக இருப்பது..

ஆண்கள் காதல் விளையாட்டுகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.. தினமும் பல புதுமைகள் செய்யும் ஆண்கள் தான் பெண்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். இது போன்ற ஆணாக இருந்தால் தான் பெண்களுக்கும் இப்போது எல்லாம் பிடிக்கிறது..!

சுலபமாக முடிப்பது

எப்போதுமே பெண்கள், ஒரு பிரச்சனையை கிளறி பூதாகரமாக மாற்றும் ஆண்களை விரும்புவதே கிடையாது.. ஆண்கள் ஒரு பிரச்சனையை எப்படி இலாவகமாக கையாண்டு அதனை சுமூகமாக முடிக்கிறார்கள் என்பதை பொருத்து தான் பெண்களுக்கு அவர்கள் மீது விருப்பம் உண்டாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here