பெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா!!

0
4913

ஆண்களின் குணமும், பெண்களின் குணமும் எதிரெதிர் துருவங்கள். ஆனாலும் ஏதோ ஒரு புரிதல் இருப்பதால்தான் காலங்காலமாக ஆண், பெண் பிரச்சனைகளுக்கு நடுவில் சேர்ந்து வாழ முடிகிறது.

ஆணுக்கென்று மாற்ற முடியாத குணங்கள் இருக்கும். அதுபோலவே பெண்களுக்கும் மாற்ற முடியாத குணங்கள் நிறையவே உண்டு. பொதுவாக ஆண்கள் அதிகபட்சம் தங்களுடைய லவ், குடி, ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி என தங்கள் கேர்ள் ப்ரெண்ட், மனைவியிடம் மறைக்கப் பார்ப்பார்கள்.

 

ஆனால் பெண்கள் சம்பந்தமேயில்லாத சின்ன சின்ன விஷயங்களைக் கூட தங்களுடைய துணையிடமிருந்து மறைக்கப் பார்ப்பார்கள். அந்த விஷயத்திற்காக நீங்கள் ஒன்றும் பெரிதாக நினைக்கக் கூட மாட்டீர்கள். ஆனாலும் அதை நீங்கள் கண்டுபிடித்தால் கூட அதனை ஒத்துக் கொள்ளாம்ல மறைக்கப் பார்ப்பார்கள்.

இதற்கு காரணம் தாங்கள் எப்போதும் பெர்ஃபெக்ட் என்று உங்களிடம் காட்டிக் கொள்ளத்தான் அப்படி உங்களிடம் அவர்கள் மறைக்கக் கூடிய விஷயங்கள், சொல்லும் பொய்கள் என்னெவென்று பார்க்கலாமா…

ஷாப்பிங் :

அவர்கள் ஷாப்பிங் செய்து வந்தால் எத்தனை செலவு ஆனதோ அதை விட கம்மியாகத்தான் சொல்வார்கள்…ஊதாரித்தனமாக செலவு செய்கிறாய் என நீங்கள் சொல்லிவிடக் கூடாதேயென ஆல்டைம் அலர்ட்டாக இருப்பார்கள்.

செக்ஸ் :

உண்மையில் உங்களுக்கு செக்ஸில் எவ்வளவு நாட்டம் உள்ளதோ அதைவிட அதிகமாகவே அவர்களுக்கு இருக்கும். ஆனால் தனக்கு அப்படியொரு ஆசையே இல்லை என்பது போல் நடந்து கொள்வார்கள்.

பொஸஸிவ் :

அவர்கள் வேறு ஆணுடன் பேசும்போது நீங்கள் கண்டித்தால், பதிலுக்கு அவர்கள் உங்களை திட்டி, இப்படி செய்வது பிடிக்கவில்லை என்பது போல் நடந்து கொள்வார்கள். ஆனால் உண்மையில் மனதில் நீங்கள் பொறாமைப்படுவதை ரசிப்பார்கள். நீங்கள் பொஸசிவாக இருக்க வேண்டுமென விரும்புவார்கள்.

ரகசியம் :

நீங்கள் அவர்களிடம் ஏதாவது ஒரு ரகசியத்தை சொல்லியிருப்பீர்கள். அதனை உயிரே போனாலும் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியிருப்பீர்கள். அவர்களும் யாரிடமும் சொல்லவேயில்லை என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவர்களுடைய நெருங்கிய ஒரு தோழியிடமாவது அதனைப் பற்றி சொல்லியிருப்பார்கள்.

அழகு :

தாங்கள் எப்போதும் வசீகரமான அழகு என மற்றவர்கள் நினைக்க வேண்டுமென நினைப்பார்கள். இதனால்தான் உங்களுடைய நண்பன் வந்தால் கூட தான் அழகா இருக்கிறோமா என டச் அப் செய்து கொள்வார்கள். ஆனால் அதைப் பற்றி உங்களிடம் பெரிதாக காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

கிண்டல் ;

என்னதான் ஹைஃபையாக உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தாலும்,ட ரோட் சைட் ரோமியாக்கள் கிண்டல் செய்தால், மனதில் ரசிப்பார்கள். ஆனால் வெளியில் தங்களுக்கு பிடிக்காதது போல் சீன் போடுவார்கள்.

ஒப்பீடு :

நீங்கள் வெறு பெண்ணுடனோ, அல்லது உங்கள் அம்மாவுடனோ உங்கள் கேர்ள் ஃப்ரெண்டை கம்பேர் செய்திருப்பீர்கள். இருந்தாலும் அவர்கள் எப்போதும் வேறு ஆணுடன் உங்களை கம்பேர் செய்து சொல்லிக்காட்ட மாட்டார்கள். அப்படித்தான் நீங்களும் நினைத்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் மனதிற்குள் அவர்களுக்கு பிடித்த ஆணுடன் உங்களின் ஒவ்வொரு செயலையும் கம்பேர் செய்து பார்ப்பார்கள். காரணமேயில்லாமல் திடீரென உங்களிடம் எரிந்துவிழுவதற்கும், திட்டுவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here