மனைவிகளுக்கு கணவன் மீது வரும் டாப் 10 சந்தேகங்கள்!

0
437

ஆண்களை ஒரு தடவையாவது சந்தேகம் கொள்ளாமல் இருக்கும் பெண்கள் மிக மிக குறைவு என்று கூறி விடலாம். ஒரு ஆண் எவ்வளவு தான் சரியாக இருந்தாலும், பெண்கள் தன் ஆணின் மீது கொண்ட அதீத அன்பினால் சில சமயங்களில் சந்தேகப்பட்டு விடுகிறார்கள்.

என்ன தான் ஒரு ஆண் ஒரு சில விஷயங்களில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் கூட பெண்கள் நம்பவே மாட்டார்கள். என்ன தான் ஒரு ஆணுக்கு தன் மனைவி தன் மீது அதிக அக்கறையாக இருக்கிறாள்… பெண்களின் சந்தேகத்தை காமெடியாக எடுத்துக் கொண்டாலும் அந்த சந்தேகம் அதிகரிக்கும் போது அதுவே அவனுக்கு தலைவலியாக அமைந்து விடுகிறது. இந்த பகுதியில் ஆண்களை பெண்கள் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் சந்தேகப்படுகிறார்கள் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

5 மினிட்ஸ்…!

வெளியே செல்ல வேண்டும் சீக்கிரம் வாங்க என்று காலையில் எத்தனை முறை தான் சொல்லி அனுப்பினாலும், மாலையில் வீட்டுக்கு லேட்டாக வருவார்கள். போன் செய்தால், இதோ 5 நிமிஷத்துல வரேன் என்று சொல்வார்கள். எத்தனை முறை கேட்டாலும் 5 மினிட்ஸ்… 5 மினிட்ஸ் என்பார்கள்.. இதை பெண்கள் நம்பவே மாட்டார்கள்.

அவளுடன் பேசுவதில்லை

உங்களது பழைய தோழிகள், முன்னால் காதலி போன்றவர்களுடன் நீங்கள் பேசுவதில்லை என்று நீங்கள் என்ன தான் சத்தியம் செய்து கூறினாலும் உங்கள் மனைவி அதனை எளிதில் நம்பி விட மாட்டார்.

அடுத்த முறை..

நான் உன்னை கண்டிப்பாக அடுத்த முறை அந்த இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என்று நீங்கள் என்ன தான் பெண்களிடம் வாக்குறுதி கொடுத்தாலும் அவர்கள் அதனை நம்புவது என்பது கிடையாது. ஆண்கள் சொன்னதை எல்லாம் எங்கே செய்கிறார்கள் என்ற எண்ணம் பெண்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

நல்லவன் என்ற பட்டம்

நான் நல்லவன் என்று யார் சொன்னாலும் கண்டிப்பாக நாமே நம்ப மாட்டோம்.. நீங்கள் உங்களை நான் நல்லவன் என்னை நம்பு என்று கூறினால் பெண்கள் கண்டிப்பாக நம்பவே மாட்டார்கள்.

நான் பார்க்கவே இல்லை

நீங்கள் ரோட்டில் செல்லும் ஒரு பெண்ணை பார்க்கவே இல்லை என்று கோவிலுக்கு அழைத்து சென்று, சூடம் ஏற்றி சத்தியம் செய்தாலும் கூட பெண்களின் மனம் அதனை ஏற்றுக் கொள்ளாது. உங்கள் மனைவிக்கு முன்னாலேயே நீங்கள் அந்த பெண்ணை பார்த்து இருப்பீர்கள் என்று அவள் அறிவாள்.

சத்தியத்தை காப்பாற்றுகிறேன்

நீங்கள் குடிப்பது, புகைப்பது போன்றவற்றை செய்யவே மாட்டேன் என்று சத்தியம் செய்து இருந்தாலும், உன்னிடம் நான் செய்த சத்தியத்தை இன்று வரையில் காப்பாற்றி வருகிறேன் என்று கூறினாலும் பெண்கள் ஒரு சிறு சந்தேக பார்வையாவது பார்ப்பார்கள்.

வெயிட்டிங் கால்

அவர்கள் உங்களுக்கு போன் செய்யும் போது, கால் வெயிட்டிங் வந்தால், நீங்கள் பையன் கூட தான் பேசிக்கிட்டு இருந்தேன் என்று சொன்னாலும் கூட, அதனை அப்படியே நம்பி விட அவர்களுக்கு மனம் வராது. நீங்கள் யாருடனோ கடலை வறுத்துக் கொண்டிருந்தீர்கள் என்று தான் நினைப்பார்கள்.

உன்னை அதிகம் நேசிக்கிறேன்

எனது முன்னால் காதலியை விட உன்னை தான் நான் அதிகமாக விரும்புகிறேன் என்று நீங்கள் உண்மையாகவே சொன்னாலும் கூட எந்த ஒரு பெண்ணாலும் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

காரணம் கூறுதல்

நீங்கள் வீட்டிற்கு தாமதமாக வந்து விட்டு உண்மையாகவே ஏதேனும் ஒரு காரணம் கூறினாலும், அதனை பெண்கள் சந்தேகம் இன்றி உடனே நம்பி விட மாட்டார்கள். சிறு சந்தேகமாவது வரும்.

உன் சமையல் சூப்பர்

நீங்கள் என்ன தான் உங்களது மனைவியை திருப்திப்படுத்த வேண்டும் என்று, உன் சமையல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் அம்மா சமையலை விட உன் சமையல் சூப்பரா இருக்கே என்று எல்லாம் சொன்னால் அதனை எல்லாம் கண்டிப்பாக நம்பவே மாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here