நிபா வைரஸை தடுக்க இந்த 3 பழங்களையும் பார்த்து கவனமா சாப்பிடுங்க

0
74

நிபா வைரஸை விட அதனைப் பற்றிய செய்திகள்தான் வேகமாக பரவி வருகிறது. இந்த நிபா வைரஸ் முதன் முதலில் மலேசியவில் பன்றிகளிடம் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் 2004 ஆம் ஆண்டு பங்க்ளாதேஷில் மனிதர்களிடன் இந்த நிபா வைரஸ் பரவியது.

இன்று இந்தியாவில் நமது பக்கத்து மா நிலமான கேரளாவில் கோழிக்கோடு,மலப்புறம் மாநிலங்களில் தாக்கியுள்ளது.

பழந்தின்னி வவ்வால்களின் எச்சம் மற்றும் சிறு நீர் மூலமாக பரவும் இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும், பாதிக்கப்படவரிய நேரடியாக தொடுவதன் மூலமாகவும் பரவும் அபாயம் உண்டு.

இதற்கு என்ன செய்யலாம்? எப்படி வராமல் தடுக்கலாமென மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை இங்கு படியுங்கள்.

எந்த பழங்களை சாப்பிடக் கூடாது?

இது வெயில் காலமென்பதால் மாம்பழம், லிச்சி போன்ற பழங்கள் சீஸனுக்கு வருபவை. குழந்தைகளையும் டீன் ஏஜர்களையும் சாப்பிட வேண்டாம் எனக் கட்டுப்படுத்த முடியாதுதான். நீங்கள் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஏரியா என்றால் மாம்பழம், பேரிட்சை, பனம்பழம், வாழைப்பழங்களை தவிர்ப்பது நல்லது. முக்கியமாக பாதி கடித்த பழங்களை சாப்பிடவே வேண்டாம்.

நீங்கள் வசிக்கும் இடங்களில் இந்த வைரஸ் தாக்குதல் இல்லையென்றாலும் இந்த பழங்களை சற்று எச்சரிக்கையுடன்தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக பழங்களை நன்றாக கழுவிட்டு சாப்பிட வேண்டும். வண்டு தின்றது போல் பழங்கள் இருந்தால் அவற்றை தவிர்த்துவிடுங்கள்.

கேரளாவிற்கு அடிக்கடி போய் வருபவர்கள் எப்படி பாதுகாக்க வேண்டும்?

கேரளாவிற்கு அடிக்கடி போய்வருபவர்கள் முகத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டே நடமாட வேண்டும். இது காற்றின் மூலமாகவும் பரவக்கூடியதென்பதால் பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பு கொள்ளாமலிருப்பது அதாவது கைகுலுக்குவது, தொடுவது, அவர்களின் பொருட்களை தொடுவது போன்றவற்றை செய்யாமலிருக்க வேண்டும்.

எதை செய்ய வேண்டும்? கூடாது?

அடிக்கடி கைகளை கழுவிக் கொண்டிருக்க வேண்டும். எல்லா உணவுகளையும் மிக சுத்தமாக தயாரிக்க வேண்டும். நோய் வயபட்ட பன்றிகளின் அருகில் போகாதீர்கள். பனங்கள்ளை குடிக்க வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here