காதலுக்கு ‘முன்’ காதலுக்கு ‘பின்’ ஆண்களிடம் உண்டாகும் ‘அடேங்கப்பா’ மாற்றங்கள்!

0
38

காதலிக்கு முன்னர் வரையில், ஒரு பொண்ணும் நம்மல திரும்பி கூட பார்க்க மாட்டாலா? என்று மனதிற்குள் ஏக்கம் இருந்தாலும், வெளியில் சிங்கிள் டா.. கெத்து டா என்று வெட்டி சவடால் விட்டுக் கொண்டு சுற்றித் திரியும் ஆண்கள்.. காதல் வந்தவுடன், ‘ காதல் என்ற வார்த்தை, அது வார்த்தை அல்ல வாழ்க்கை ‘ என்று அப்படியே உல்டாவாக மாறிவிடுகின்றனர்.

எந்த நேரமும் நண்பர்கள்… குட்டி சுவர்.. வெட்டி பேச்சு.. திருட்டு தம் என்று சுற்றித் திரியும் இந்த ஆண்களின் வாழ்க்கை பல விதங்களில் காதலுக்கு பின்னர் மாறுகிறது. காதல் என்றைக்குமே ஒருவரை சிறந்தவராக்குகிறது.. அது நாம் காதலிக்கும் நபரை பொருத்து வேறுபடும்.

காதலிக்கும் முன்னும் என்ன தான் கடுமையான, கோபக்கார ஒருத்தனாக இருந்தாலும், காதலித்த பின்னர் ஆண்கள் ஒரு பூவைக் கூட மென்மையான முறையிலேயே கையாழுகின்றனர். இந்த பகுதியில் மேலும் எப்படி எல்லாம் ஆண்கள் காதலித்த பின்னர் மாறுகின்றனர் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

சுத்தம்

காதலிக்கும் முன்னர் ஆண்கள் நான்கு நாட்களுக்கு ஒரே ஆடையை கூட துவைக்காமல் மாற்றி மாற்றி அணிவார்கள்.. ஆனால் காதலிக்க ஆரம்பித்த பின்னர், அயர்ன் செய்யாமல் அந்த சட்டையை போட மாட்டேன் என்ற அளவிற்கு மாறிவிடுவார்கள். வித விதமாக ஆடைகளை அணிவார்கள்.. தன் காதலி சூப்பராக இருக்கிறாயே.. என்று ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்பதற்காக தங்களது சுய சுத்தம் மற்றும் ஆடைகள் விசியத்தில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.

பேஸ் புக் அரட்டை

காதலிக்கும் முன்னர் வரையில் ஆன் லைனில் இருக்கும் மற்றும் இல்லாத பெண் என அனைத்து பெண்களுக்கும் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்து விடுவார்கள்.. ஆனால் காதல் வந்த பின்பு, தன் காதலிக்கு மெசேஜ் அனுப்பவே பயப்படுவார்கள்.. அதோடு மட்டுமின்றி, பேஸ் புக்கில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை செய்யும் ஆண்களை அடியோடு வெறுப்பார்கள்..

காதல் பற்றிய அறிவு

இணையத்தில் அதிகமாக காதலியிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று தேடித் தேடி படித்துக் கொண்டிருப்பார்கள். காதலில் இதுவரை பூஜியமாக இருந்த ஆண்கள், தற்பொழுது காதல் பற்றி வகுப்பு எடுக்கும் அளவிற்கு தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள்.

பாசம்

இதுவரையில் தனது அம்மா, அப்பா, தம்பி, தங்கை போன்றவர்களை மதிக்காமல் திரியும் இந்த ஆண்கள், காதல் வந்த பின்னர் தன் காதலி சொன்ன ஒற்றை சொல்லை மதித்து அனைவரிடத்தில் அன்பாகவும் நடந்து கொள்வார்கள்.

வேலைக்கு செல்வார்கள்

இதுவரை வேலைக்கு செல்லாத ஆண்களாக இருந்தால், பொருப்பாக வேலைக்கு செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.. ஏனென்றால் அவர்களுக்கு காதல் செலவுகளுக்கு பணம் தேவைப்படும் அல்லவா? அதற்காகவாவது வேலைக்கு செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

மொபைல் பேச்சு

இதுவரையில், மிஸ்டு கால் விடும் போது, நண்பன் போன் காலை எடுத்து விட்டால், காசு போச்சே என்று கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டும் ஆண்கள், இனி மேல் ரேட் கட்டர் போட்டு, போன் பேலன்ஸை அதிகமாக வைத்துக் கொள்வார்கள். மணிக் கணக்கில் போனில் பேசி, போன் கம்பெனிக்கு சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.

பர்ஸ் காலியாகும்

என்ன தான் செலவு செய்தாலும் காதலிக்கும் முன்பு தீராத பணம்.. இப்போது காதலியோடு ஒரு காபி குடிக்க சென்றாலே தீர்ந்து விடுவதை உணர்வார்கள்.. காதலிக்கும் முன்னர் பாக்கெட்டில் பத்து ரூபாய் இருந்தாலே பணக்காரன் போல உணரும் ஆண்கள், காதலிக்க ஆரம்பித்த பின்னர் பாக்கெட்டில் பத்தாயிரம் ரூபாய் இருந்தாலும் கூட பணமே போதவில்லையே என்று பீல் செய்து கொண்டிருப்பார்கள்.

வேகத்தடை

ஊரில் உள்ள அனைவரும் திட்டியும் கேட்காதவர்கள், தனது குடும்பத்தில் உள்ள யார் திட்டியும் கேட்காத ஆண்கள், காதல் வந்த பிறகு பைக்கில் வேகமாக செல்லாமல், மெதுவாக தான் செல்வார்கள்.. அந்த அளவுக்கு பொருமைசாலியாக மாறிவிடுவார்கள். அதுமட்டுமின்றி சாலைகளில் உள்ள வேகத்தடைகள் மிகவும் பிடிக்கும். அதிகமாக பிரேக் போடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here