தினேஷ் கார்த்திக்கின் வெற்றியை கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்… ஏன் தெரியுமா?

0
42266

கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிச்சுற்றில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.

தினேஷ் கார்த்திக் களமிறங்கும்போது இந்திய அணி 2 ஓவர்களில் முப்பத்து நான்கு ரன்களை எடுக்க வேண்டிய கடினமான சூழல் நிலவிக் கொண்டிருந்தது. வங்கதேச ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இந்த அழுத்தம் மிகுந்த நெருக்கடியில் எண்ட்ரீ கொடுத்த தினேஷ், அசுரத்தனமாக விளையாடினார். 6 பந்துகளில் 22 ரன்களை விளாசி, இந்திய ரசிகர்களை ஓ போட வைத்தார்.

7 பந்துக்களில் 2 பவுண்டரி சிக்ஸர்கள் விளாசியிருந்தார் தினேஷ் கார்த்திக். இவர் மூலம் கிடைத்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாது, அந்த திடலில் கூடியிருந்த இலங்கை வீரர்களும் கொண்டாடினர். வங்கதேச வீரர்களை சரமாரியாக கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார்கள். பாம்பு டான்ஸ் ஆடி அங்கிருந்த வங்கதேச ரசிகர்களையும், வீரர்களையும் கிண்டல் செய்தனர்.

இசைக்கு மொழிகள் கிடையாது என்பார்கள், ஆனால் விளையாட்டிற்கும் மொழிகள் ஒரு தடை இல்லை என்பதை இந்த நிகழ்வு கூறுகிறது. இந்த வெற்றியை கொண்டாடியது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, இலங்கை ரசிகர்களும் கோலாகலமாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது திருமணம் செய்யப்போகும் சசிகலா புஷ்பாவின் ஆரம்பக்கால வாழ்க்கை இதுதான்!

அன்றைய அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்த கவுண்டமணி வசனங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here