கமலின் ஆகச் சிறந்த படமாக நீங்கள் எதை சொல்வீர்கள்?

0
887

கமல் ! இந்திய சினிமாவின் அடையாளம். கோடிட்டு வேறொருவரால் நிரப்ப முடியாத நடிகர். இதுவரை இத்தனை படங்கள் நடித்தும் முதல் படத்திற்கான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையுமே ஒவ்வொரு படத்திற்கும் தருவார். அவர் ஏனோதானோவென நடித்த படம் இது என்று ஒரு படத்தையும் உங்களால் சுட்டிக் காட்ட முடியாது.

அவரது ஒவ்வொரு படமும், ஒவ்வொரு காலத்தின் அடையாளமாக மாறிப் போனது உண்மை. மூன்றாம், பிறை, மகா நதி, ஹேராம் , தசாவதராம், என எல்லா படங்களும், ஒவ்வொரு காலத்தை நமக்கு சுட்டிக் காட்டும்.

குறிப்பாக இவரது ஒரு படம் வெளி வந்ததும், அது தொட்ர்பாக நிஜமாக நடப்பது மிக ஆச்சரியம். சிவப்பு ரோஜாக்கள் படம் வந்ததும், அந்த படத்தில் நடித்த கேரக்டர் போலவே நிஜத்தில் ஒருவன் பிடிப்பட்டான்.

மகா நதி படம் வந்ததும், அது போலவே சிட் ஃபன்ட்ஸ் ஒவ்வொன்றும், ஏமாற்றியது வெளி வந்தது. அன்பே சிவம் படத்தில் சுனாமி பற்றி பேசும் போது யாருக்கும் அது பற்றி தெரியவில்லை. ஆனால் அந்த படம் வந்த அடுத்த வருடமே சுனாமி வந்து உலகத்தையே புரட்டிப் போட்டது. இப்படி பலப் படங்களில் தெரிந்தோ தெரியாமலோ முன்கூட்டியே சில விசயங்களை சொன்ன தீர்க்க தரிசி கமல்.
சரி அவரோடு ஆகச் சிறந்த படங்கள் என்று எவற்றை சொல்லலாம்?

மூன்றாம் பிறை :

கமல் என்று சொன்னால் மூன்றாம் பிறை படம் நினைவுக்கு வராவிட்டால், அவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்று அர்த்தம். இப்படத்தின் இதயமென பாலு மகேந்திராவில் இயக்கத்தையே, ஒளிப்பதிவையா? கமலையா? ஸ்ரீதேவியையா? யாரைச் சொல்வது? என்ன நடிப்பு? மன நலம் பிறழ்ந்த ஸ்ரீதேவியை காப்பாற்றி தன் வீட்டில் அடைக்கலம் தந்து, தன் காதலை தந்து காப்பாற்றிக் கொண்டிருப்பார். இறுதியில் ஸ்ரீ தேவி குணமானவுடன், கமலை மறந்து செல்வார். இதைக் கண்ட கமல் பைத்தியமாவார். ஸ்ரீதேவி ஐயோ பைத்தியம் என பச்சாதாபம் கொள்வதுடன் படம் முடியும். இப்படி பார்ப்பவர்களின் இதயத்தை கனமாக்கி இன்னொரு படம் எவராலும் தர முடியுமா என்பது தமிழ் சினிமாவில் சந்தேகம்தான்.

நாயகன் :

மும்பையில் ஒரு அண்டர் கிரவுண்ட் தாதா, எளியவர்களுக்கு நல்லது செய்பவர், விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணை காதலித்து மணம் செய்து, குழந்தைகள் பெற்று இறுதியில் மனைவியை காவல் துறைக்கு பலி கொடுத்து, தன் பிள்ளைகளிடம் வெறுப்பை சம்பாதித்திருப்பார். தனது வாழ்க்கையையே எளிய மக்களுக்காக இழந்ததால், அங்கிருக்கும் மக்கள் அவரை காட்டிக் கொடுக்க மாட்டார்கள். இறுதியில் அவர் கொன்ற பொர் போலிஸின் மகனே அவரை கொன்று விசுவார். இப்படம் இந்திய அளவில் பேசப்பட்டது. 3 தேசிய விருதுகள் பெற்றிருக்கிறது.

சலங்கை ஒலி :

ஒரு தீவிர நடன கலைஞர். நடனத்தின் மீது தீராத ஆசை, தனக்கான அடையாளம் கிடைக்க ஒரு மேடையைத் தேடுவான். ஆனால் அவனுக்கு கிடைக்காமல் எல்லாமே தோல்வியில் முடியும். இவனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வரும். ஆனால் அவளை மணமுடிக்க முடியாமல் போக, அவன் வாழ்க்கையும் எல்லா தோல்விகளும் சேர்த்து அவனை குடிக்கு அடிமையாக்கிவிடும்.

வயதான பின் கதாநாயகியின் மகளுடன், அவர் யாரென தெரியாமலேயே மோதல் உண்டாக, கதா நாயகி அவருடைய மகளுக்கு நடனம் சொல்லித் அவனிடம் அனுப்புவார். ஒரு காட்சியில் ஒரு கிணற்றின் மீது நின்று நடனம் ஆடும் போது, அவரைக் காப்பாற்ற நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு கதானாயகி அங்கு வர, இருவரும் சந்திக்கும் அந்த தருணத்தில் இளையராஜாவின் பிண்ணனி இசை சேர்ந்து கொள்ள ஒரு கவிதையாக முடியும் அந்த பாடல். இந்த படத்திற்கும் 3 தேசிய விருதுகள் கிடைத்தது.

மகா நதி :

மகாநதி ! இதுவும் தேசிய விருது வாங்கிய படம். மனைவியை இழந்த ஒரு அப்பாய் இளைஞர், அவனது இரு குழந்தியகளோடு கிராமத்தில் ராஜ வாழ்க்கை வாழும் போது, அந்த அப்பாவி இளைஞரை ஒரு கூட்டம் பணம் பறிக்க நகரத்திற்கு கூட்டி வந்து, ஃபைனான்ஸ் கம்பெனியை ஆரம்பிக்க சொல்லி, கதா நாயகனை ஏமாற்றி பணத்தை எடுத்துக் கொண்டு ஏமாற்றி ஓடி விட, அந்த இளைஞனை போலிஸ் பிடித்துக் கொண்டு போகும், அவருடைய மகளை மும்பை ரெட் லைட் ஏரியாவில் விற்று விட, அவருடைய மகனை ஒரு நாடோடி கும்பலுடன் சேர்ந்து விடுவான்.

இப்படி குடும்பமே சின்னா பின்னமாகிவிடும். இறுதியில் அவர் வெளி வந்து அவர்களை பழி வனகி, தனது பிள்ளைகளை மீட்டு மீண்டும் தன் கிராமத்து குடியேறுவதுடன் முடியும் இந்த கதை.

இப்படி உங்கள் மனதிற்கும் பிடித்த கமலின் மிகச் சிறந்த படமாக எந்த படத்தை சொல்வீர்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here