தங்கத்தில் காலணி செய்து அணிந்த திருமண மாப்பிள்ளை!

0
1098

இந்திய திருமணங்கள் தங்கத்தாலும் வைரத்தாலும் நிர்மானிக்கப்படுபவை. நம் பெண்கள் தங்க நகைகளை அணிந்து திருமண விழாவில் கலந்துகொல்வதையே கௌரவம் என கருதுவார்கள். ஆனால் பாகிஸ்தானில் திருமண மாப்பிள்ளை ஒருவர் தங்கத்தால் ஆன காலணியை அணிந்திருக்கிறார்.

பாகிஸ்தானின் லாஹோர் மாகாணத்தை சேர்ந்த இவர் அணிந்திருக்கும் காலணி முழுக்க முழுக்க சுத்தமான தங்கத்தால் உருவாக்கப்பட்டது. இதன் மதிப்பு பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் இதன் மீது கொடுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள், கற் பதிப்புகள் அனைத்தும் சேர 16 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கலாம்.

தங்கத்தினால் ஆன ‘டை’யை இவர் அணிந்திருக்கிறார். மட்டுமின்றி தங்க முலாம் பூசப்பட்ட கோட்-ஷ்யூட் எல்லாம் சேர்த்து மொத்தமாக அறுபத்து எட்டு லட்சம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மாப்பிள்ளை கூறுகையில், தங்கமாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் வாழ்க்கையில் அவற்றைக் கொண்டு மட்டும் சந்தோஷமாக இருந்துவிட முடியாது. பணம் என்பது மனிதனுக்கு அடிப்படையானதாக இருந்தாலும் அதை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேயே வைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தங்க காலணியை அணிந்துள்ளதாக கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here