சினிமா ரசிகர்கள் 2.0 படத்தின் கொண்டாட்டத்தில் ரொம்பப் பிசியாக இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் சப்ரைஸாகப் படத்தின் மோஷன் பிச்சரில் வரும் தூக்குதுறை-யின் குடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லேடி சூப்பர்ஸ்டார்.
சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தின் வேலைகள் அனைத்தும் முடித்துவிட்ட நிலையில், இப்படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
மேலும் படம் பொங்கலுக்கு வெளியாக அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது, ஆனால் இந்தப் பொங்கலுக்குக் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படமும் வெளியாகிறது எனக் கூறப்படுகிறது. இதே நிலையில் அஜித் மற்றும் ரஜினி இந்தப் பொங்கலுக்குப் போட்டி போடப்போகிறார்கள்.
படத்தின் ரிலீஸ் தேதிகள் இப்படி இருக்கும்போது 2.0 வெளியான இந்தச் சூழ்நிலையில் நயன்தாரா விஸ்வாசம் குடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
The Family.. #ThookuDuraiFamily 💝 #ViswasamFamily 👍 pic.twitter.com/zwBmTRIMGR
— Nayanthara✨ (@NayantharaU) November 29, 2018