லாபத்தில் குத்தாட்டாம் போடும் டிசிஎஸ்.. ஊழியர்களுக்கு கிடைத்தது என்ன..?

0
2100

நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் 2018ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் 7,901 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது கடந்த வருடத்தின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 22.57 சதவீதம் அதிகம் என்பதால் இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

TCS-Walk-in

2017ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் டாடா குழுமத்தின் மென்பொருள் வர்த்தகப் பிரிவான டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 6,646 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது 22.57 சதவீதம் வரையில் உயர்ந்து 7,901 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 36,854 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்று இருந்தது இது கடந்த நிதியாண்டில் 30,541 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் ஒரு பங்கிற்கு 4 ரூபாய் ஈவுத்தொகை அறிவித்துள்ளது.

இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் இயக்க லாப அளவுகள் 26.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 1.44 சதவீதம் அதிகம் என்பது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது.

இக்காலாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்தில் புதிதாக 10227 ஊழியர்கள் பணியில் அமர்த்தியுள்ளனர். இது கடந்த 12 காலாண்டுகளை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் 100 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 4 வாடிக்கையாளர்களையும், 20 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 7 வாடிக்கையாளர்களையும், 10 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 10 ஆர்டர்களையும், 1 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 11 ஆர்டர்களையும் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தில் வருவாயும், லாபமும் சிறப்பாக இருப்பதால் சிடிஎஸ் நிறுவனத்தை போல டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பணிநீக்கம் இருக்காது என்பது உறுதி. இதுதான் டிசிஎஸ் காலாண்டு முடிவில் ஊழியர்களுக்கு கிடைத்த நற்செய்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here