சகல வியாதிகளுக்கும் அருமருந்து தமிழ்நாட்டு சாம்பார்!

0
2040

வேறு மாநிலத்தினருக்கும், வெளிநாட்டினருக்கும் தமிழகம் என்றாலே இட்லி, வடை, சாம்பார், சட்னிதான் நினைவுக்கு வரும். பிரிட்டன் மகாராணி கூட தமிழகம் வந்தால் ஒரு முறையாவது சாம்பாரை சுவைக்காமல் நாடு திரும்பமாட்டார். சாம்பாரின் சுவைக்காகவே வட இந்தியர்கள் இட்லி வாங்கி சாப்பிடுவார்கள். குறிப்பாக மும்பை மற்றும் பெங்களூரில் சாம்பாருக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. பி.எம்.டபுள்யூ. காரில் செல்பவர்களும் கூட சைக்கிளில் விற்கும் இட்லியை சாம்பார் ஆரத்தழுவ வாங்கி சாப்பிடுவார்கள். இது இல்லாத எந்த திருமணப் பந்தியையும், சுபநிகழ்ச்சி பந்திகளையும் பார்த்திருக்கவே முடியாது. இட்லியோ, அன்னமோ இரண்டில் எதுவானாலும் அதன் இணைக்கு வழங்கப்படும் பிரதான கூட்டே சாம்பார்தான்.

இத்தனையும் மூலிகைகள்:
துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, புளி கரைசல், காய்கறிகள், முக்கியமாக முருங்கை காய், பரங்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், நல்லெண்ணெய், வெல்லம், நெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாய், கடலை பருப்பு, வற கொத்தமல்லி, மிளகு, வெந்தையம், தேங்காய் என இத்தனை பொருட்களும் ஒன்றிணைந்து உருவாக்குவதுதான் சாம்பார்.

இத்தனையும் சத்துகள்:
இத்தனை பொருட்களில் இருந்து எல்லா வகையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. எனவேதான் சாம்பார் கலோரிகள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது. சராசரியாக ஒரு கப் சாம்பாரில் 308 கலோரிகள் அடங்கியுள்ளன. 265 கிராம் பொட்டாசியம், 9 கிராம் கொழுப்பு, 3 கிராம் நார்ச்சத்து, 3 கிராம் சர்க்கரை, 15 கிராம் புரோட்டீன், 14 மில்லி கிராம் சோடியம் மற்றும் அதனுடன் இரும்புச்சத்தும், விட்டமின் ‘சி’யும் அடங்கியுள்ளன. பச்சை பட்டாணியை சேர்த்தல் கூடுதலாக சத்துக்கள் கிடைக்கும். நார்ச்சத்து மிகுந்த முருங்கை, பரங்கி, பூசணி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை போட்டால் அதிக நார்ச்சத்தும் கிடைக்கும்.

கேன்சரை தடுக்கும்:
இப்படிப்பட்ட சத்தான சுவையான சாம்பார்தான் இந்தியர்களின் பெருங்குடல்களில் புற்றுநோயை ஏற்படுத்த விடாமல் தடுத்து, ஆயுளை நீடிக்கிறது என சமீபத்திய அமெரிக்க ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் Colon Cancer அதாவது பெருங்குடல் புற்றுநோயானது பொதுவாக காணப்படும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அந்நோய் தாக்குவது இயல்பு என எண்ணும் அளவிற்கு அங்கே மக்கள் நோயுடன் கூடி வாழ பழகிக் கொண்டார்கள். இதே இந்தியாவில் இந்த பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறைவிலும் வெகு சொற்பமே. காரணம் இந்தியர்கள் தங்களது அன்றாட உணவுகளில் சாம்பார் ஊற்றி சாப்பிடுவதுதான் என கூறுகிறது அமெரிக்க ஆய்வறிக்கைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here