ராஜீவ் கொலை: 7 பேரை விடுவிக்கத் தமிழக ஆளுநருக்கு உரிமை இல்லை.. அதிர்ச்சி தகவல்..!

0
6488

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுக் கடந்த 27 வருடங்களாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்

இந்த 7 பேரின் விடுதலையைத் தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை அடுத்துச் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலைப் பெற வாய்ப்புகள் உருவாகியது.

அதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவிப்பது குறித்துத் தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை விடுவிப்பது குறித்துத் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க முடியாது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ-யின் கீழ் நடைபெற்றதால், மத்திய அரசுடன் ஆளுநர் பரிசீலனை செய்த பிறகே இந்த வழக்குக் குறித்த முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 7 பேரில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், நளினி ஆகியோருக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பிய காரணத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here