இத்தனை நாடுகளில் தமிழ் வாழ்கிறது… தமிழர்கள் வாழ்கின்றனர்…!!

0
1012

உலகின் மூத்த இனம் என அறிவியல் விஞ்ஞான வல்லுனர்களால் போற்றப்படும் தமிழர் இனத்தின் பரம்பரையினர் உலகம் முழுவதும் படர்ந்து வாழ்ந்தனர். இதற்கு பல சாட்சியங்களும் ஆதாரப்பூர்வ கண்டெடுப்புகளும் கிடைத்துள்ளன. நம் அனைவரின் கண்களுக்குமே புலப்படும் சாட்சியாக அய்யன் திருவள்ளுவன் ஈந்த திருக்குறளே இருக்கிறது. திருக்குறளுக்கு ‘உலகப்பொதுமறை’ என்றொரு பெயரும் இருக்கிறது. தமிழர்கள் இவ்வுலகம் முழுவதும் வாழ்ந்துள்ளான் என்பதற்கு இதுவே ஆதார நூல். இன்றளவும் பல்வேறு நாடுகளிலும், பிரதேசங்களிலும், உலகளாவிய அமைப்புகளிலும் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது. இதைப் பற்றிதான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

நாடுகளின் அடிப்படையில்:

சிங்கப்பூர்: இந்திய வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் சிங்கப்பூரை நமது சோழர்கள் ஆண்டுள்ளனர். எனவே அந்நாட்டின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது.

இலங்கை: இன்றைய இலங்கை தமிழகத்துடன் தொடர்புடையது. இந்தியப் பெருஞ்சமுத்திரத்துக்குள் மூழ்கியுள்ள குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதியே இலங்கை. இலங்கை தமிழர்களின் தமிழ் பண்டைய தமிழ் மொழியை ஒத்தது மற்றும் சுத்தமான தமிழ்(கொடுந்தமிழ்) ஆகும். இலங்கையில் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது.

மாகாணங்களின் அடிப்படையில்:

அந்தமான் நிக்கோபார் தீவுகள்: சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பண்டைய காலத்தில் சோழ மன்னர்கள் வசம் இருந்தன.

பாண்டிச்சேரி: பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, யானம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ள பாண்டிச்சேரி பிரதேசத்திலும் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது.

தமிழகம்: தமிழர் நாகரீகம் தழைத்தோங்கிய தமிழகத்தில் தமிழ் அலுவல் மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருக்கிறது.

ஹரியானா: வட இந்திய மாநிலமான ஹரியானாவில் தமிழ் அலுவல் மொழியாக இருந்தது. பின்னாளில் பஞ்சாபி அலுவல் மொழியாக மாற்றப்பட்டது.

சண்டிகர்: இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்ட மாநிலமான சண்டிகரில் தமிழ் அலுவல் மொழியாக இருந்தது. தற்போது பஞ்சாபி அலுவல் மொழியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here