தமிழ்ப் புத்தாண்டில் இதை செய்தால் ‘வாழ்நாள் அதிகரிக்கும்’… தமிழர் அறிவியல்!

0
821

தமிழ்ப் புத்தாண்டு என்ற பண்டிகை மற்றும் அதன் கொண்டாட்டங்கள் இருந்ததற்காக பழைமையான சான்றுகள் பெரிதளவில் தென்படவில்லை என்றாலும், தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை அடிப்படையாக கொண்டு, பன்னிரண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையை முதல் மாதாமாக கருதப்பட்டு வந்தது. சங்க இலக்கியமான நெடுநெல்வாடையில் மேஷமே முதல் ராசி என்ற குறிப்பு காணப்படுவதால் சித்திரையே முதல் மாதமாக கொள்ள முடிகிறது.

இந்த திருநாளில் வீட்டில் மருந்து நீர் வைப்பது என்பது முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. இம்மருந்து நீரில் தாழம்பூ, தாமரை, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிரந்தி, சீதேவியார் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி மற்றும் சுக்கு ஆகிய மூலிகைகளை நீரில் கலந்து காய்ச்சி கஷாயமாக தயாரிக்க வேண்டும்.

இந்த மருந்து கலவையை குளிக்கும் நீரில் கலந்து நீராடினால் உடலுக்கும் மனதுக்கும் புது உற்சாகம் பிறப்பதோடு, நோய்கள் இல்லாத வாழ்வை பெறலாம். நம்முடைய ஆயுட்காலமும் அதிகரிக்கும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை.

குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஈழத் தமிழர்கள் இவ்வகை குளியலை எடுத்துக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு விவரம் இல்லை என்றாலும் விடயம் அறிந்த வெகுசில மக்கள் இவ்வாறு குளியல் மேற்கொள்கிறார்கள். குளிக்கும்போது தலையில் கொன்றை இலையும், காலில் புங்கை இலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று நீராட வேண்டும்.

குளித்தப் பின் இந்த மருந்து நீரை வீட்டில் உள்ள பெரியவர்கள், தாய்-தந்தை, சகோதர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவரின் மீதும் தெளிக்க வேண்டும்.

மேலே சொல்லப்பட்டுள்ள பூக்கள் மற்றும் மூலிகைகள் உங்கள் பகுதியில் உள்ள நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். சில பூக்கள் கிடைக்கவில்லை என்றாலும் அவைகளின் இல்லை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது கொண்டு குளியல் எடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here