தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றி வெளிவராத உண்மைகள்!

0
4715

தனது இன மக்களுக்காக போரிலோ அல்லது இயற்கையாகவோ மரணம் அடைந்த தம் முன்னோர்களை குல தெய்வங்களாக வணங்கும் முறையே வழிபாடாக திகழ்ந்தது. இந்த வழிபாட்டின் மூலம் தங்கள் குலத்திற்காக தாங்கள் கூற வேண்டிய கடமைகளையும், அரும்பெரும் ஈகைகளையும் எண்ணிப் பாராட்டி நன்றி கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. முன்னோர்கள் செய்த சாதனை நாட்களை வாழும் மக்கள் நினைவு கூர்ந்து விழா எடுக்கத் தொடங்கினர். இப்படியாக உருவானதுதான் உலகின் வழிபாடு முறைகளும் அதன் தத்துவங்களும். தமிழ்க் கடவுள் என போற்றப்படுகின்ற முருகனும் நமது முன்னோர்களின் ஒருவரே. அவரும் ஒரு மறத்தமிழனே என விவரிக்கிறது இந்த கட்டுரை.

மருத நில வாரிசுகள்:

அரசக் குடும்பங்கள் தோன்றலுக்கு முந்தைய காலக்கட்டம், அரசுகள் விரிவடையத் தொடங்கிய நேரத்தில், மருத நில ஊர்க்குடும்புமுறை அரசுகள் தங்களது ஆட்சியை எல்லா நிலப்பரப்புகளுக்கும் விரிவுபடுத்தின. மருத நில மரபினரே நான்கு வகை நிலப்பரப்பையும் ஆளத் தொடங்கினர். மருத வேந்தர்கள் அரசர்களாகினர், அவர்களே பேரரசர்களாகினர். இவர்கள்தான் ஆதிகால பாண்டியர்கள் எனப்பட்டனர். மருத நில அரசர்கள் அனைவரும் நல்லாட்சி செய்து, வாழ்நாளுக்கு பின்பு மக்களால் தெய்வங்களாக வணங்கப்பட்டனர். தம் கொடையின் கீழ் வாழும் குடிகளை பகைவர்களிடம் இருந்தும், கள்வர்களிடம் இருந்தும் பாதுகாக்கும் போரில் வீரமரணம் அடைந்த படைத்தலைவர்களும் கடவுளராக வணங்கப்பட்டனர்.

முருகன் பாண்டியனே:

உலகம் எங்கும் தமிழ்க்கடவுள் என போற்றப்படும் முருகனும் மருத நிலத் தலைவன். ஆதிகால பாண்டிய மன்னர் ஆவார். மதுரை நகரை ஆண்ட அரசி மீனாட்சி எனும் தடாதகைப் பிராட்டிக்கும், சுந்தரபாண்டியன் எனும் வேந்தனுக்கும் பிறந்தவர். முருகனின் இயற்பெயர் உக்கிரப்பாண்டியன். மலையத்துவசப் பாண்டியனுக்கும், சூரசேன சோழனின் மகளான காஞ்சனமாலைக்கும் பிறந்தவர்தான் மீனாட்சி. முருகனின் தாய். குறிஞ்சி நிலத் தலைவன் என தொல்காப்பியத்தில் போற்றப்படும் முருகன்தான் மருதநிலக் கிழவன் என்றும் குறிப்பிடப் படுகிறார்.

இலக்கியச் சான்று:

மள்ளர் மரபினரைச் சேர சோழ பாண்டிய வேந்தர்களாக சங்க இலக்கியங்களில் முதல் பிற்கால சிற்றிலக்கியங்கள் வரை புகழ்ந்து பாடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மள்ளர் மரபினரே பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர். இப்பள்ளரே தொல்காப்பியம் போற்றும் மருதநில “வேந்தன் (இந்திரன்)” வழிவந்த இந்திர குலத்தவர்(தேவேந்திர குலத்தவர்) எனவும் இன்றும் அழைக்கப்பட்டுவருகின்றனர். எனவே முருகன் மருத நிலத்து மள்ளர் குலத்தை சார்ந்தவன் எனும் போது அவன் மருத நிலக் கிழவனாகவும், தமிழனாகவும் ஆகிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here