மலட்டுத் தன்மை கோளாறு இருந்தால், முன்கூட்டியே தெரிய வரும் அறிகுறிகள்!!

0
74

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் மிகப் பெரிய வரம் ஆகும். குழந்தையை சுமக்கும் அந்த பத்து மாதங்கள் என்பது தவம் போன்றதாகும். ஒரு பெண்ணின் கர்ப்பம் என்பது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாமல், அவளை சுற்றி உள்ள அனைவருக்குமே சந்தோஷத்தை தருகிறது.

ஆனால், இத்தகைய மகிழ்ச்சியான வாய்ப்பானது சில பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒன்றாக ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் என்பது பெண்களின் அலட்சியப்போக்கு தான். சில பெண்களுக்கு என்ன தான் மருத்துவமனைக்கு சென்றாலும், நவீன சிகிச்சைகளை மேற்க் கொண்டாலும் கூட குழந்தை பாக்கியம் கிடைப்பது கிடையாது.

பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் சில மாற்றங்களை கவனித்து அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் போவதும் கூட, பெண்களின் கருவுறாமைக்கு காரணமாகிறது. இந்த பகுதியில் பெண்களுக்கு கருவுறாமை பிரச்சனை இருக்கிறது என்பதைதேவையற்ற முடிகள் உணர்த்தும் சில அறிகுறிகள் பற்றி காணலாம்.

கருப்பை இரத்தப்போக்கு

அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு என்பது பெண்களுக்கு, கருப்பையில் பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்துவதாக உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், அது பின்னாளில் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிவிடும். எனவே இது போன்ற நிலை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

டெஸ்டிரோன் என்பது முகத்தில் முடி வளர்ச்சியை உண்டாக்கும் ஒரு ஆண் ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் பெண்களுக்கும் கூட இருக்கும் ஒன்றாகும். ஆனால் இது பெண்களுக்கு மிகவும் குறைவான அளவு மட்டுமே பெண்களுக்கு இருக்கும். உங்களுக்கு டெஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகளவு சுரந்தால் அதனை முகத்தில் வளரும் முடியை வைத்தே கண்டு பிடித்து விடலாம்.

இந்த ஹார்மோன் அதிகளவு சுரந்தால் உங்களது உதட்டின் மேல் பகுதி மற்றும் கன்னங்களில் அல்லது தாடை பகுதிகளில் முடி வளர்ச்சியானது அசாதரணமாக இருக்கும். இது போன்ற மாற்றங்கள் தேன்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

Adolescent Girl with Head in Hands

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் பிரச்சனை என்பது பல பெண்களை அச்சுறுத்தும் ஒன்றாக உள்ளது. மாதவிடாய் சரியான கால இடைவெளில் வராமல் தள்ளிப் போவது அல்லது வெகு விரைவாகவே வருவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதற்கான தீர்வு காண வேண்டியது அவசியம். இதனை சாதாரணமாக விட்டுவிட கூடாது.. மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு உண்டானாலோ அல்லது மிகவும் குறைவாக இருந்தாலோ, அளவுக்கு அதிகமான வலி உண்டானாலோ மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

இடுப்பு வலி

கர்ப்பக்குழாயில் ஒருவித தழும்புகளை உண்டாக்கும் PID ஆல் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இடுப்பு வலி மற்றும் பின்புற எழும்பு வலிகள் உண்டாகும். இது கருமுட்டை கருப்பப்பையை அடைவதை தடுப்பதாக அமையும். எனவே இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

உடலுறவின் போது வலி

உடலுறவின் போது வலி உண்டாவது என்பது சாதரணமானது என்றாலும் கூட, உடலுறவின் போது அசாதரண வலி உண்டானால் அதனை கவனிக்காமல் விட்டு விட கூடாது. இந்த அசாதாரண வலியானது உங்களது பவுள் மூமண்டை பாதிப்பதாக அமைந்து விடும்.

உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை அதிகரிப்பு என்பது சாதாரணமான விஷயம் தான் என்றாலும் கூட, சீக்கிரமாக உடல் எடை அதிகரிப்பது என்பது ஏதேனும் ஒரு பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது கருவுறாமைக்கு கூட காரணமாக அமையலாம்.
முகப்பருக்கள்
முகப்பருக்கள் வருவது என்பது சாதாரணமான விஷயம் என்றாலும் கூட, திடிரென பெருகும் முகப்பருக்கள் கூட கருவுறாமை பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.

முடி உதிர்வு பிரச்சனை

முடி உதிர்வு பிரச்சனை ஆனாது பலருக்கும் இருப்பது தான்.. ஆனால் வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான முடி உதிர்வானது சொரியாஸிஸ் அல்லது கருவுறுதல், அனிமியா போன்ற பிரச்சனைகளின் காரணமாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here