கருப்பை நீர்க்கட்டியை அலட்சியப்படுத்தினால் உண்டாகும் பின்விளைவுகள் என்ன தெரியுமா?

0
448

கருப்பை நீர்க்கட்டி!! சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாதது? இன்று நிறைய பெண்களை பாதிக்கும் ஒரு நோய் இது.கருப்பை நீர்க்கட்டி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? வந்தால் அதனை எப்படி குணப்படுத்துவது என பலருக்கும் இதனைப் பற்றி தெரியாது.

இன்னும் நிறைய பெண்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது கூட பல வருடங்கள் கழித்துதான் தெரிகிறது. சீரற்ற மாதவிடாயை கண்டு கொள்ளாமல் இருந்தால் அல்லது வலியை பொருட்படுத்தாமல் இருப்பது என இருந்தால் கருப்பை நீர்க்கட்டியின் தீவிரம் அதிகரிக்கும்.

கருப்பை நீர்க்கட்டி யாருக்கெல்லாம் வரலாம்?

இது உலகளவில் 10ல் ஒரு பெண்ணிற்கு இந்த பிரச்சனை உண்டாகிறது. எவருக்கும் வரலாம் எந்த வயதிலும் வரலாம். குறிப்பாக 18-44 வயது வரை இருக்கிற பெண்களை அதிகமாக தாக்குகிறது என்பதால் இந்த வயதினில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். மாதவிடாயில் ஏதாவது பிரச்சனை உண்டானால் உடனடியாக கவனிக்கப்படுவது அவசியம்.

எது காரணமாகிறது?

இந்த நோய் வருவதற்கு மரபியல் காரணமாக இருக்கலாம். நமது உணவுப் பழக்கங்கள் மாறுபடுவதால் அல்லது அதிக மன அழுத்தத்தை மனதில் ஏற்றிக் கொள்வதாலும் கருப்பை நீர்க்கட்டி வரலாம். முக்கியமாக இரவில் சரியாக தூங்காமல் அல்லது லேட் நைட் தூங்கினால் இந்த நோய் வருவதற்கான அதிக சாத்தியங்கள் இருக்கிறது.

எப்படி உருவாகிறது?

பெண்களுக்கு கருப்பை கரு முட்டைகளை உற்பத்தி செய்கின்றது. திடீரென ஏற்படும் மாற்றம் காரணமாக ஈஸ்ட்ரோஜன் குறைவாக சுரக்கும். ஆண்களின் ஹார்மோனான ஆண்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். இதனால் கருப்பையில் திசுக்கள் உருவாகும். இதைத்தான் கருப்பை நீர்க்கட்டி என்று சொல்கிறோம்.

அறிகுறிகள் :

ஆன்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால், உடலிலும், முகத்திலும் அதிக முடி வளர்ச்சி, உடல் முழுவதும் பருக்கள், முகத்திலும் தீவிர முகப்பருக்கள், உடல் பருமன், அதிக கோபம், அடிக்கடி டென்ஷன், மன அழுத்தம், காரணமில்லாமல் அழுகை போற்றவை ஏற்படும். சிலருக்கு சொட்டை விழுவதும் நடக்கும். சிலருக்கு தாங்க முடியாத அடி வயிற்று வலி வரும். அதிக ரத்தப் போக்கும் உண்டாகும். சிலருக்கு வாரக் கணக்கில் அதிக ரத்தப் போக்கு தொடர்ந்து இருக்கும்.

இதனால் வரும் பாதிப்புகள் :

இதற்கு தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்லாமல் விட்டால் இதனால் பலவித நோய்களும் உண்டாகும். கருப்பை நீர்க்கட்டியினால் சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு என கூறப்படுகிறது. இதய நோய்களும் கருப்பை நீர்க்கட்டியினால் ஏற்படும்.

இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உண்டன. அறிகுறிகள் பொறுத்தும் நோயின் தீவிரம் பொறுத்தும் நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன.

ஆனால் ஆரம்பத்துலேயே கண்டறியப்பட்டு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு நன்றாக தூங்கி நல்ல உணவுகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவ சிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்தி விடலாம் என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here