சூரிய பொங்கலன்று காலை 7 மணிக்குள் இதை செய்தால் பண மழை கொட்டும்!

0
145922

விவசாயத்திற்கு மீப்பெரும் உதவிகரமாக திகழ்ந்த கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை முதல் நாளில் சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரியனே எல்லாவற்றுக்கும் அதிபதி என்பதால் சூரியனை வழிபட நாம் யாரும் தவறிவிடக்கூடாது. சூரிய வழிபாடு என்பது மூத்த தமிழ்க்குடியின் வழிபாடும் கூட. ஆனால் இக்காலத்தில் குறிப்பிட்ட மக்களை தவிர வேறு யாரும் முறையாக சூரிய வழிபாட்டை மேற்கொள்வது இல்லை. சூரியப் பொங்கல் நாளன்று சூரிய ஓரை காலத்தில் சூரியனை வழிபட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? எவ்வளவு பலன்கள் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சூரியனே ஆன்மா:
சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா என்பதால் நீர்நிலையில் மார்பளவு வரை இறங்கி இரு கரங்களை உயர்த்தி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். சூரியக்கதிர்கள் தண்ணீரில் பட்டு, அதன் அலைகள் எளிதாக உங்கள் உடலை வந்தடையும். இது உங்களது ஆரோக்கியத்தை பன்மடங்கு மேம்படுத்தும்.

ஓரை வழிபாடு:
எனவே சூரியப் பொங்கல் நாளன்று சூரிய ஓரை காலமான ‘காலை 6 மணி மணிக்கு மேல் 7 மணி மணிக்குள்’ சூரியனை நோக்கி வழிபாடு செய்ய வேண்டும். அப்போது சூரியனுக்கு ஏற்ற மந்திரத்தையோ, அல்லது எளிதில் உங்களால் முடியும் தமிழ் போற்றியையோ சொல்ல வேண்டும். இந்த ஒரு நாள் மட்டுமல்ல தினமும் கூட நீங்கள் சூரிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

பலன்கள்:
தினமும் அதிகாலை சூரிய உதயத்தின்போது கதிரவனை கையெடுத்து வணங்கிட வேண்டும். இதனால் உடலிலும், மனதிலும் எண்ணற்ற ஏற்றமான மாற்றங்களும், வாழ்வில் ஏற்றங்களும் ஏற்படும். செல்வமும், ஆரோக்கியமும் கூடும். அந்தஸ்து தேடி வரும். எண்ணிய காரியங்கள் சித்தியடையும். வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here