கமலஹாசனின் இந்த படம் ரிலீஸான பின் நிஜமாகவே நடந்த சம்பவங்கள்!!

0
448

கமலஹாசனின் படங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்தவை. ஆரம்ப காலத்திலிருந்தே புதுப்புது சோதனைகளை அவர் சினிமாவில் புகுத்தி அதில் வெற்றி, தோல்விகளைக் கண்டவர்.

தோல்வியடைந்தாலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த குறிக்கோளை நோக்கி செல்பவர். அவருடைய படங்கள் வெளிவந்தவுடன் அதுப் போலவே நிகழ்வுகள் நமது நாட்டில் தலையெடுப்பது ஆச்சரியமான உண்மை. எந்த மாதிரியான நிகழ்வுகள், எந்த படத்தை ஒத்துப் போகிறது என பார்க்கலாமா?

சிவப்பு ரோஜாக்கள் :

1978 ஆம் ஆண்டு வெளி வந்த சிவப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு சைக்கோ கில்லராக நடித்திருப்பார். அதே போல் அடுத்த வருடமே “சைக்கோ ராமன்” என்பவன் தொடர்ந்து பெண்களை கொன்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

சத்யா :

1988 ஆம் ஆண்டு வெளி வந்த சத்யா படத்தில் கமலஹாசன் வேலையில்லாத பட்டதாரியின் போரட்டங்களை சொல்லியிருந்தார்..89-90 களில் வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் மேலோங்கி பெரிய பிரச்சனையாக உருவானது.

தேவர் மகன் :

1992 ஆம் ஆண்டில் வெளி வந்த தேவர்மகன் படம் முழுக்க சாதிக் கலவரம் பற்றியதனா கதைதான். அவ்வாறே 1993 ஆம் ஆண்டு தேனி மதுரை மாவட்டத்தில் சாதிக் கலவரம் வெடித்து பிரச்சனைகளை சந்தித்திதோம்.

மகா நதி :

கமலஹாசன் ஒரு சீட்டுக் கம்பெனியில் ஏமாறி அவரது வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களை 1994 ஆண்டு வெளிவந்த மகாநதி படத்தில் சொல்லப்பட்டது. சரியாக இரண்டு வருடங்கள் கழித்து நாடு முழுவதும் சீட்டு கம்பெனிகள் அப்பாவி மக்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியன.

அன்பே சிவம் :

2003 ஆம் ஆண்டில் வந்த அன்பே சிவம் படத்தில் ஒரு சீனில் சுனாமி பற்றி கமல் சொல்வார். அப்போது அதனைப் பற்றி யாருக்குமே ஒன்றும் தெரியாது. சரியாக ஒர் வருடம் கழித்து 2004 ஆம் ஆண்டில் சுனாமி வந்து இந்தியாவையே உலுக்கியது.

வேட்டையாடு விளையாடு :

2006 ஆம் ஆண்டில் வந்த வேட்டையாடு விளையாடு படத்தில் இரு சைக்கோ கேரக்டர்கள் சீரயல் கொலைகளிய செய்வார்கள். அதுபோலவே மூன்று வருடங்கள் கழித்து நொய்டாவில் இரு சைக்கோக்கள் இப்படி சீரியல் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

தசாவதாரம் :

2008 ஆம் ஆண்டில் வந்த தசவதாரம் படத்தில் ஒரு மோசமான வைரஸ் காற்றில் கலந்து உயிரைக் கொல்வதாக படம் வந்தது. 2009 ஆம் ஆண்டில் காற்றில் பரவக் கூடிய ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் நமது நாட்டில் பரவி மோசமான விளைவைக் கொடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here