‘வீரமாதேவி’யாக வாள் வீசும் சன்னி லியோன்!

0
302

கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவழிப் பெண்ணான சன்னி லியோன் ஆபாசத் துறையில் உலகப்புகழ் பெற்றக்கர். சில வருடங்களுக்கு முன் இந்தியா வந்தவர் பாலிவுட் மூலம் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, தமிழில் அறிமுகமானார், தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஞானம் ஆடியிருந்தார்.

இப்போது ‘வீரமாதேவி‘ என பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜேந்திர சோழனின் மூன்று மனைவிகளில் ஒருவர்தான் வீரமாதேவி. சோழன் இறந்தபிறகு வீரமாதேவியும் உயிர் நீத்ததாக வரலாறு. எனவே இப்படம் வீரமாதேவிக்கும், சோழனுக்கும் இடையேயான காதல் உறவை பற்றிய சப்ஜெக்ட்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சவுகார்பேட்டை’, ‘பொட்டு’ படங்களை இயக்கிய இயக்குநர் வடிவுடையான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் சன்னி லியோனின் இமேஜ்ஜை மாற்றும் அனா அவர் தெரிவித்திருந்தார். மட்டுமின்றி வீரமாதேவி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here