பிரபாகரின் வாழ்கையை படமாகிறது இயக்குனர் இவர் தான்..!

0
1478
பிரபாகரின் வாழ்கையை படமாகிறது இயக்குனர் இவர் தான்..!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாகிறது.

தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடிய பிரபாகரன் அனைத்து தமிழ் மக்களாலும் அதிகம் போற்றப்படக்கூடியவர். தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மறுத்த இலங்கை அரசுக்கு எதிராக போராடினார். உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக போற்றுகின்றனர். தமிழீழ போரின் போது 2009 ஆம் ஆண்டு மே17 அன்று இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியதால், பிரான்ஸ் அரசு பிரபாகரனின் உருவப்படத்தைக் கொண்ட தபால்தலையை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்டமாக தயாரிக்க ஸ்டுடியோ 18 நிறுவனம் முன்வந்துள்ளது.“உனக்குள் நான்”, “லைட் மேன்” மற்றும் “நீலம்” போன்ற படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் குமார் இப்படத்தை இயக்குகிறார். திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகள் மற்ற கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here