5 நிமிடத்தில் 4 லட்சம் கோடி கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் இந்தியர்கள்..!

0
4207

இந்திய ரூபாய் மதிப்பின் மோசமான நிலை, சர்வேதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் அன்னிய முதலீடுகள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எச்சரிக்கை ஆகியவை பங்குச்சந்தை வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெரிய அளவில் பாதிக்கிறது.

இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கிய 5 நிமிடத்தில் சுமார் 4 லட்சம் கோடி சந்தை மதிப்பீடு குறைந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பீடு அளவு 1.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் இது 134.38 கோடி ரூபாயாகக் குறைந்தது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பீட்டு அளவு அதிகப்படியாக 1.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, இன்று காலை சீன மற்றும் ஆசிய சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி முக்கியச் சந்தைகள் அனைத்தும் பாதிப்புக்குள்ளானது. இதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தையும் பாதித்துச் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை இழந்து இந்திய முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.

10.45 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2.38 சதவீதம் அதாவது 827.48 புள்ளிகள் சரிந்து 33,933.41 புள்ளிகளை இழந்தது. அதேசமயம் நிஃப்டி குறியீடு 256.40 புள்ளிகள் சரிந்து 10,202.10 புள்ளிகள் சரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here