உலகின் மிக உயரமான சிலையான படேல் சிலையின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?

0
670

இந்தியாவின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இன்று உலகம் முழுவதும் டாக் ஆஃப் த டவுன் இந்த சிலை திறப்புதான். காரணம் இச்சிலையின் உயரம். உலகிலேயே இது வரை இல்லாத உயரத்தில் நிறுவப்பட்ட சிலை சர்தர வல்லபாய் படேலின் சிலைதான்.

சிலையின் விவரம் :

இந்த சிலையின் உயரம் 182 மீட்டர். உலகின் மிக உயரமான சிலையாக இப்போது இந்த சிலை பெயர் பெற்றுள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட மிக அதிக உயரம் இந்த சிலை.

இந்த சிலை குஜராத் மாநிலத்தில் , நர்மதா மாவட்டத்தில் சர்தார் அணை அருகில் உள்ள சாது பேட் என்ற சிறிய தீவில் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை என்று அழைக்கும் வகையில் அதில் எல்லா மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் முழுக்க பிழையாக இருந்ததால், அது சமூக வலை தளங்களில் கேலிக்குரியதாகி இருக்கிறது.

இச்சிலையை மோடி இன்று திறந்து வைத்தார். வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று இச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

அவருடைய சிலையை திறந்து வைத்தவுடன், நமது தேசிய கொடியில் உள்ள 3 வர்ணங்களில் பொடி தூவி, வனைல் தேசிய கொடி போல் காண்பிக்கப் பட்டது.

அதன் பின் பிரதமர் நரேந்திர மோடி, படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த சமயத்தில் 2 ஹெலிகாப்டர் மூலம் படேல் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன.

அதன் பின் காவல் துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படையினரால் இணைந்து கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன..

சிலைக்கான செலவு :

இந்த மிக உயரமான சிலையை நிறுவ, 70 ஆயிரம் டன் சிமென்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு மற்றும் வெளிப்பூச்சிற்கு 1700 டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டது. இந்த சிலை செய்வதற்கான செலவு எவ்ளோ தெரியுமா? வாயைப் பிளக்காதீங்க..வெறும் 2,989 கோடி தானாம்.

நமக்கான எல்லா வசதிகளும் கிடைச்சாச்சு. மக்கள் எல்லாரும் இன்புற்றிருக்கின்றனர். இனி என்ன? ஆடம்பரமான, டாம்பீக வாழ்க்கைதான் இப்போதைக்கு நமக்கு தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here