வைகுண்ட ஏகாதேசியில் இதை செய்தால் சகல பாவங்கள் நீங்கும்!

0
1130

வருடத்தில் 24 அல்லது 25 முறை ஏகாதேசி வரும். இதில் மார்கழியில் மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. வைகுண்ட ஏகாதேசி அன்றுதான் அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசம் செய்த நாள். இந்த நாளை கீதாஉபதேசம் என்றும் சொல்கிறார்கள் . கீதா ஜெயந்தி என்றும் சொல்வார்கள்

இந்த வைகுண்ட ஏகாதேசியில் சில விஷயங்களை செய்தால் மிக அற்புத பலன்கள் கிடைக்கும்., ஒன்று, கண் விழித்து விஷ்ணு வை பாராயண்ம செய்தல், விரத்ம் இருத்தல் மற்றும் கோவிலுக்கு சொர்க்க வாசல் திறக்கும் போது செல்லுதல் ஆகும்.

ஏகா தேசி விரதம் அன்று விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயண்ம செய்வது விசேஷமாகும். விஷ்ணுவை தேவதையாக கொண்டு இயங்கும் புதம் மற்றும் சனி கிரங்களால் உண்டான தோஷம் மறைந்து, உயர்வான பலன்கள் உண்டாகும். குறிப்பாக பித்ரு தோஷம் நீங்கும்.

முக்கோடி தேவர்களின் துன்பத்திய போக்கியதால், வைகுண்ட ஏகாட்ஹேசி முக்கோடி ஏகாதேசி என்று அழைக்கப்படுகிறது. நாராயணனுக்கு உகந்த திதி இந்த ஏகாதேசி திதி . இந்த ஏகாதேசியில் விரதத்தை கடைபிடித்தால், நம்முடைய சகல பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏகாதேசியில் மேற்கொள்ளும் விரதத்திற்கு நிகரில்லை என்று சொல்லப்படுகிறது.

பரமபத வாசல் அடையும் வாய்ப்பு எந்த ராசிக்கு அதிகம்?

குரு கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசியை பார்பதால், இந்த ராசி மற்றும் இந்த ராசிகளிய லக்னங்களாக கொண்டவர்களுக்கு பரமபத வாசல் தரிசனம் பெறும் யோகம் அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here