காலா பட ட்ரைலர்ல ரொம்ப ஸ்பெஷல் என்னன்னு பாத்தீங்களா?

0
62

காலா படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியத் தமிழ்ரகளுக்கும் விருந்தாக இருக்கும் என்பது அந்த ட்ரைலரை பார்க்கும்போதே தெரியுது.

ரஜினி, நானா படேகர், அஞ்ச்லை படேல், ஈஸ்வரி ராவ் ,சமுத்திரக்கனி போன்றவர்கள் நடித்திருக்கிறரகள்.

கருப்பு சட்டை வேட்டியில் ரஜினி வரும்போது அப்படியே ஜிவ்வுன்னு ஒரு வைப்ரேஷன் வருவது அவரோட ரசிகர்களுக்கு மட்டுமில்லைங்க. பாக்கிற எல்லாருக்கும்தான்.

“ஒரு இடம் விடலையே. அவ பின்னால கோட்டி புடிச்சுல்ல திரிஞ்சேன்”- என சிரிச்சுட்டே அவர் சொல்லும்போது அவருடைய 80 களின் நடிப்பு ஞாபகம் வருது.

என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமா?

அஞ்சலி படேல் “என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமா”? எனக் கேட்டதும். ” ரஜினி தனக்குரிய ஸ்டைலில் வாயை கோணித்து” ரொம்ப ” என்று மிடுக்காக சொல்லும்போது… வ்வா…வ்வ்வ்வ் நன்னு நச்சு ந்னு இருந்தது அந்த காட்சி.

ஈஸ்வரி ராவ் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று சொன்னதும் அவரே நம்பவில்லையாம். ஆனால் அவரின் நடிப்பு ட்ரைலரிலேயே வசீகரித்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐ லவ் யூ டி:

ஈஸ்வரி ராவிடம் ஒரு பையன். அப்போ அப்பாக்கு உன் மேல லவ் இல்லையாம்மா ” எனக் கேட்டதும்…

” போடா.. போய் காலாட்ட கேளு” என்று சொல்வது, அடுத்த க்ளிப்பிங்கில் ” ஐ லவ் யூ டி” என ரஜினி ஈஸ்வரி ராவில் சொல்வதும் செம்ம மாஸ்.

இந்த ட்ரைலரில் ஸ்பெஷல் என்னென்ன, அடிதடி, புரட்சி போராட்டங்களுக்கு நடுவில் ஈரம் படர்ந்த மண் வாசனைப் போல் அவருடைய காதல் வசனங்கள்..

பல ஆண்டு காலம் ரஜினி பயன்படுத்தாத ஒன்று, இன்று மீண்டும் ,மெருகேறி வந்திருக்கிறது. அது என்ன தெரியுமா? அவரின் நடிப்பு.

அவரின் நடிப்பை சரியாக பயன்படுத்தத் தெரிந்த மகேந்திரன், பாலச்சந்தருக்குப் பிறகு ரஞ்சித் என்று சொல்லலாம். நீங்களும் ட்ரைலர் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

வி ஆர் வெயிட்டிங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here