இந்த வருட தீபாவளிக்கு 20,567 சிறப்புப் பேருந்துகள்.. உடனே முன்பதிவு செய்யுங்கள்..!

0
1319

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால் பேருந்துகளின் தேவை அதிகரிக்கிறது.

இந்நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.

இந்த இப்பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர்.1ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் வெளியூர் செல்லும் மக்கள் முன்கூடியே டிக்கெட்களைப் புக் செய்துகொள்ளுங்கள்.

மேலும் சென்னை கூட்ட போக்குவரத்து பிரச்சனையை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

அதேபோல் ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here