2019: எந்தெந்த மாதம் எப்போது விடுமுறை.. முழு விபரம்

0
1629
2018ஆம் ஆண்டு முடியும் நிலையில் 2019ஆம் ஆண்டுப் பல கனவுகள் மற்றும் நம்பிக்கையோடு துவங்க உள்ளது. இந்நிலையில் உங்களைக் குஷிப்படுத்தும் வகையில் 2019ஆம் ஆண்டில் வரும் நீண்ட விடுமுறைகள் குறித்து முழுமையான தகவல்களை ஸ்பார்க்டிவி தமிழ் அளிக்கிறது.
ஜனவரி 2019 
வருடத்தின் முதல் மாதத்திலேயே 3 நாள் விடுமுறை வருகிறது. ஜனவரி 12, 13, 14 ஆகிய நாட்கள் விடுமுறை. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை என்பதால் 15 மற்றும் 16ஆம் தேதியும் விடுமுறை.
மார்ச் 2019 
பிப்ரவரி மாதத்தில் நீண்ட விடுமுறை பெரியதாக இல்லை. ஆனால் மார்ச் மாத்தில் 2 நீண்ட விடுமுறை உள்ளது. மார்ச் 4ஆம் தேதி சிவராத்திரி நாட்டின் சில பகுதிகளில் விடுமுறை அளிக்கப்படும் காரணத்தால் மார்ச் 2,3,4 ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதேபோல் மார்ச் 21ஆம் தேதி ஹோலி பண்டிகை வருகிறது, இதனால் 22ஆம் தேதி மட்டும் விடுமுறை பெற்றுக்கொண்டால் 21 முதல் 24 வரை என 4 நாட்கள் விடுமுறை பெறலாம்.
ஏப்ரல் 2019 
ஏப்ரல் 19ஆம் தேதி புனித வெள்ளி காரணமாக விடுமுறை, இதனைத் தொடர்ந்து வரும் 20, 21 ஆம் தேதியும் விடுமுறை என்பதால் 3 நாள் தொடர் விடுமுறை பெறலாம்.
ஆகஸ்ட் 2019 
ஆகஸ்ட் 12ஆம் தேதி பக்ரித் என்பதால் ஆகஸ்ட் 10,11,12ஆம் தேதி தொடர்ந்து 3 நாள் விடுமுறை பெறலாம்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் என்பதால் 16ஆம் தேதி விடுமுறை பெற்றால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை பெறலாம்.
செப்டம்பர் 2019 
ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1, 2 எனத் தொடர்ந்து 3 நாள் விடுமுறை. செ2 விநாயகர் சதுர்த்தி.
இதே மாதத்தில் செ.10ஆம் தேதி மொகரம் பண்டிகை வரும் காரணத்தால் 9ஆம் தேதி விடுமுறை எடுத்தால் 7, 8, 9,10 என நான்கு நாட்கள் விடமுறை பெறலாம்.
அக்டோபர் 2019 
தீபாவளி பண்டிகையொட்டி அக்டோபர் 26, 27, 28, 29 என நான்கு நாட்கள் விடுமுறை பெறலாம்.
டிசம்பர் 2019 
இந்த மாதத்தில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் தேதி விடுமுறை எடுத்தால் 5 நாட்கள் விடுமுறை பெறலாம். இந்தச் சுற்றுலாவிற்குச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here