மனதை உருக்கி, காற்றில் கரைந்த ஒரு குரல்!!

0
1083

“எவனோ ஒருவன் வாசிக்கிறான். இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்” என ஒரு குரலை கேட்கும் போது நமது ஆத்மா உருகி அப்படியே கரைந்து போவது போல் இருக்கும். அந்த குரலுக்கு சொந்தமானவர் ஸ்வர்ண லதா. அவரின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.

அவர் அப்பா ஒரு மலையாளி, அம்மா ஒர் தமிழர். இவர் பாலக்காட்டில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் பாலக்காட்டில் பிறந்தார். இவரது குடும்பம் இசைக் குடும்பம்தான். அவரது அப்பா ஹார்மோனிய கலைஞர். ஸ்வர்ண லதாவின் குடும்பம் கர்நாடகாவில் உள்ள ஷிமோகா மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து அங்கு அவரது பள்ளிப் படிப்பை படித்தார்.

அவருடைய குரலிலுள்ள தனித்தன்மையை பார்த்து, எம். எஸ் விஸ்வ நாதன் “நீதிக்கு தண்டனை” என்னும் படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலை பாட வைத்தர. அப்போது அவருடைய வயது 14 தான்.

அதன் பின் இளையராஜா குரு சிஷ்யன் படத்தில் ஒரு பாடலை பாடினார். ஆனால் சத்ரியன் படத்தில் “மாலையில் யாரோ ” பாடலில் இருந்த வசீகரம் அவரை இந்த உலகிற்கு காண்பித்தது.

அவருடைய குரலில் இருக்கும் கிறக்கம், மென்மை, கமகத்தை எடுத்துக் கொண்டு செல்லும் லாவகம் எல்லாமே தேன் கலந்த பழத்தை சாப்பிடுவதுபோல் ஒரு வித மயக்கத்தை கேட்பவருக்கு கொடுத்தது.

அதன் பின் அவருடைய  “போவாமா ஊர்கோலம்”, “ஆட்டமா தேரோட்டமா? “பாட்டெல்லாம் வேற லெவல். எந்த பாடல் எடுத்தாலும் அதன் சுவை குன்றாமல் ரசனையோடு நமக்கு அவர் தருவது மனதிற்கு விருந்து.

சில பாடகர்கள் குறிப்பிட்ட இசைக்கு மட்டுமே பொருந்துவரகள். ஆனால் ஸ்வர்ண லதாவின் குரல் எல்லா இசையமைப்பாள்ர்களுக்கும், கிராம, நகர, மேற்கத்திய என எல்லா ரக பாடல்களுக்கும் பொருந்தியது தான் இவருடைய தனித்தன்மை.

அவர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த ” போறாளே பொன்னுத்தாயி ” பாடலை பாடியிருப்பது நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும். அதில் அவர் அவரோகணத்தில் குரலை கொண்டு வரும்போதும் சரி, மேலே ஆரோகணத்தில் எடுத்துச் செல்லும்போதும் சரி, இப்படியெல்லாம் குரலை கொண்டு செல்ல முடியுமா? என மயக்க வைக்கும் குரலில் பாடியிருப்பார். அந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

 

அது போலவே இன்னொரு பாடல் ” என்னுள்ளே.. என்னுள்ளே” பாடலில் கேட்பவர்களுக்கும் தாபம் ஒட்டிக் கொள்ளும்படி பாடியிருப்பார்.

சரியாக ஒரு மொழியை உள்வாங்கி அதனை அதன் ரசம் குன்றாமல் பாடி மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பாடகர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதில் ஸ்வர்ண லதா ஒரு தேவதை என்று சொல்லலாம்.

ஹிந்தி தெரியாமலும் அவருடைய குரல் பாலிவுட் இசையில் மாய வித்தை செய்தது. ரங்கீலா படத்தில் அவருடைய ” ஹை ராமா” என்ற பாடல் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

அவர் வாங்கிய விருதுகள் :

தேசிய விருது- 1
தமிழ் மாநில விருதுகள் – 3
சினிமா எக்ஸ்பிர்ஸ் விருது – 4

அரசு விருது :

கலைமாமணி விருது
நந்தி விருது

அது மட்டுமல்லாமல் பிபிசி உலகம் வானொலி அவருக்கு 1991 ஆம் ஆண்டு ” ராக்கம்மா கைய தட்டு” பாடலுகாக சிறந்த பிண்ணனிப் பாடகி விருதையும் கொடுத்திருகிறது.

அவர் அவருடைய குரலை இந்த உலகத்திற்கு விட்டு விட்டு உயிரை துறந்தது 2010 ஆம் ஆண்டு sep- 12. நுரையீரல் பாதிப்பினால் தனது 37ஆம் வயதில் அவரது இறந்தார். இருப்பினும் தேவதைகளுக்கு இறப்பில்லை. இசை என்று ஒன்று இருக்கும் வரை, ஆன்மா என்று ஒன்று இருக்கும் வரை தவம் போல் அவரது குரலும் இந்த உலகில் வியாபித்திருக்கும்.

” கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்”

என ஸ்வர்ணலதாவின் குரல் மயிலிறகு போல் வருடும், அதன் இசையில் நாமும் நம் கவலைகளை மறந்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here