வீட்டில் செல்வம் சேர உதவும் எளிமையான பரிகாரங்கள்!!

0
1344

எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் ஏதாவது ஒரு வழியில் பணம் கரைந்து கொண்டே இருக்கும். ஆனால் ஒரு சிலரிடம் மட்டும் பணப்புழக்கத்தைப் பார்த்து நாம் பெருமூச்சு விட்டிருக்கிறோம்.

நாம் யாருக்கும் கெடுதல் செய்யலையே நமக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை என்று நினைத்து கவலைப்படுபவர்கள்தன நம்மில் பெரும்பாலோனோர்.

எத்தனைப் பிரச்சனைகள் இருந்தாலும் சின்ன சின்ன பரிகாரங்களால் உங்கள் பணத்தை விரயமாக்காமல் தக்க வைக்க முடியும். அவற்றை இங்கு காண்போம்.

கொத்துமல்லி :

வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது மண்பாண்டத்தில் நீர் விட்டு அதில் சில கொத்தமல்லி இலைகளை போட்டு வைக்கவும். தினமும் புதிதாக செய்ய வேண்டும்.

கற்றாழை :

வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடு இல்லாமல் கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

சோளம் :

வீட்டினுள் தென்கிழக்கு திசையில் அரை கிலோ சோளம் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும். பழைய சோளத்தை பறவைகளுக்கு தீனியிட்டுவிடுங்கள். புண்ணியம் கிடைக்கும்.

குங்குமம்

தினமும் வெளியே கிளம்பும் நேரம் சிகப்பு குங்குமம் கொண்டு இடது கையில் ஒரு சின்ன குச்சியால் ரூபாய் சின்னமான “ரூ” என்று எழுதி நாள் முழுவதும் அடிக்கடி இதை பார்த்து வாருங்கள். பௌர்ணமியில் தொடங்கி எண்ணி பதினைந்து நாட்கள், அதாவது அமாவாசை வரை செய்து வாருங்கள். பணப்புழக்கம் தாராளமா இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here