சிம்புடன் ஜோடி சேரும் அனுஷ்கா.. டைரக்டர் யார் தெரியுமா..?

0
264

தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா இருப்பதைப் போலவே டோலிவுட்டில் அனுஷ்கா மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி படத்திற்குப் பின் பெரிய படங்களில் எதுவும் ஒப்பந்தம் செய்யாமல், முன்னணி இயக்குநர்களிடம் கதையை மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சிம்பு உடன் சேர்ந்து அனுஷ்கா தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.

Simbu and Anushka to team up succesful tamil director - sparktv tamil சிம்புடன் ஜோடி சேரும் அனுஷ்கா.. டைரக்டர் யார் தெரியுமா..? - ஸ்பார்க்டிவி தமிழ்

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிப் படத்தின், 2ஆம் பாகத்தின் கவுதம் இயக்குகிறார். இந்தப் படத்தில் தான் சிம்பு, அனுஷ்கா நடிக்கிறார்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2வது பாகத்திற்கு விண்ணைத்தாண்டி வருவேன் எனத் தலைப்பு வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சிம்பு, அனுஷ்கா ஜோடி ஏற்கனவே வானம் படத்தில் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here