ஜிம்க்கு போகாமல் தினமும் 7 நிமிடம்  இந்த உடற்பயிற்சிகளை செய்தால் அழகான உடலமைப்பு பெறலாம்..!

0
1241

நம் ஒவ்வொருவருக்கும் அழகான உடல் அமைப்பு வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்வதுண்டு. இருப்பினும் நம் எதிர்பார்த்த அந்த மாதிரி உடல் அமைப்பு உண்டாகவில்லை என்று வருத்தப்படுவதுண்டு. என்னதான் நீங்கள் ஜீம்மிற்கு சென்றும் உடலை கசக்கி கொழுப்பை குறைத்தும் சரியான உடலமைப்பு பெற முடியவில்லையே என்று நினைத்து புலம்புவதை விடவும், வீட்டிலே இந்த உடற்பயிற்சியை வெறும் 7 நிமிடங்கள் மட்டும் செய்யுங்கள், பிறகு நீங்களே மற்றத்தை உணருவீர்கள்.

இது உடற்பயிற்சிகள் அறிவியல் அடிப்படையில் ஆனது. இந்த உடற்பயிற்சியின் பெயர் அதிக தீவிரம் சுற்று பயிற்சி ஆகும். இதற்கு உடலோடு உங்களுடைய மனமும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த பயிற்சி தினமும் செய்தவன் மூலம் விரைவில் கட்டுக்கோப்பான உடலமைப்பை பெறலாம். மொத்தம் 12 உடற்பயிற்சிகளை 30 நொடிகளாக ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் 10 நொடிகள் மட்டுமே இடைவெளி எடுத்கொள்ள வேண்டும். உடனே அடுத்த உடற்பயிற்சியினை செய்ய வேண்டும்.

தினமும் 7 நிமிடம்  உடற்பயிற்சி மட்டும் செய்யுங்க அப்புறம் ரிசல்ட் நீங்களே சொல்லுவீங்க

குதித்தல்:
கைகளை மேலே தூக்கிக் கொண்டு, இரண்டு கால்களை சற்று அகலமாக விரித்து குதிக்க வேண்டும். இதேப்போல் 30 நொடிகள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

தினமும் 7 நிமிடம்  உடற்பயிற்சி மட்டும் செய்யுங்க அப்புறம் ரிசல்ட் நீங்களே சொல்லுவீங்க

சுவரில் சாய்ந்து உட்காருதல்:
நாற்காலியில் அமர்வதுப்போல் சுவரில் சாய்ந்து கொண்டு, உடல் 90 டிகிரியில் இருக்க வேண்டும். கைகள் இரண்டும் சுவரில் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும்.

தினமும் 7 நிமிடம்  உடற்பயிற்சி மட்டும் செய்யுங்க அப்புறம் ரிசல்ட் நீங்களே சொல்லுவீங்க

தண்டால்:
தொடர்ச்சியாக 30 வினாடிகள் தண்டால் செய்ய வேண்டும். இந்த பயிற்சி உடல் வலிமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here