ஆசிய சந்தையால் மோசமான நிலையில் மும்பை பங்குச்சந்தை..!

0
2621

ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ந்து 2வது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு லாபமாக இருந்தாலும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில் ஆசிய சந்தையில் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்து இந்திய சந்தையை அதிகளவில் பாதித்தது.

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 356.46 புள்ளிகள் சரிந்து 37,165.16 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 101.50 புள்ளிகள் சரிந்து 11,244.70 புள்ளிகளை அடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பார்தி ஏர்டெல், கோட்டாக் வங்கி, மாருதி சுசூகி, ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here