முதல் முறையாக 38,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்.. என்ன காரணம்..?

0
3289

வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக 38,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

கடந்த வாரம் உலகில் அதிகச் சந்தை மதிப்புடைய பங்குச்சந்தைகள் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி ஜப்பான் முன்னேறியது. இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கா சீனா பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடை மிக முக்கியமாக இருந்தது.

BSE-SENSEX

இந்நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் சீனா மற்றும் ஹாங்காங் சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்ட காரணத்தால் இந்திய சந்தையில் அளவிலான முதலீடு குவிந்தது.

இதன் எதிரொலியாக விழாக்கிழமை காலை வர்த்தகம் துவங்கிய முதல் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 38,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

Market SENSEX

12.00 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 142.31 புள்ளிகள் உயர்ந்து 38,029.87 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 25.20 புள்ளிகள் உயர்ந்து 11,475.20 புள்ளிகளை அடைந்துள்ளது.

இதேநேரத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி அதிகப்படியாக 4.42 சதவீதம் வரையில் அசத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.

மறுபுறம் பார்தி ஏர்டெல் 4.56 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் பின் டைடன், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here