தோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..?

0
8261

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளியேறிய நிலையில், இப்போட்டிக்கு மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார் மகேந்திரசிங் தோனி.

199 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி, அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளிலும் இருந்து கேப்டன் பதவியை விட்டு வெளியேறிய நிலையில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையில் நடந்த இந்தப் போட்டியில் கேப்டனாக 200வது போட்டியை விளையாடினார் தோனி.

MS Dhoni

 

இது இந்திய அணியில் தேர்வாளர்களுக்குப் பிடிக்க எனவும், இந்த நிகழ்வால் ரோஹித் சர்மா மீதும் கோபம் உருவாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டியின் போது இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஷிகர் தவான் ஆகிய இரண்டு பேருமே வெளியேறிய நிலையில் கேப்டன் பதவியை வேறு வழியே இல்லாமல் தோனி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இது தேர்வாளர்களுக்குக் கோபத்தை உருவாக்கியுள்ளது எனப் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

MS Dhoni

696 நாட்களுக்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி கேப்டனாக விளையாடிய நிலையில் தனது 200 போட்டியில் கேப்டான இந்தப் பேட்சில் விளையாடினார். இது தோனியின் ரசிகர்களுக்குப் பெரிய கொண்டாட்டமாகவே இருந்தது.

இதன் மூலம் அதிக ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருந்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பான்டிக் (230), ஸ்டீபென் பிளெம்பிங் (218) ஆகியோர் இருந்த நிலையில் இவர்களுடன் தோனி 200 போட்டிகள் உடன் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

dhoni sakshi

ஆசிய கோப்பையில் இந்திய அணியில் ஆஸ்தான கேப்டன் விராத் கோலி இல்லாத காரணத்தால் கேப்டனாக ரோஹித் சர்மா-வும் மற்றும் துணை கேப்டனாக ஷிகர் தவான் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இருவர்களின் செயலால் தோனி மீண்டும் கேப்டன் பதவியைப் பெற்ற நிலையில் தேர்வாளர்கள் கடுப்பாகியுள்ளனர்.

ஜனவரி 2017ஆம் ஆண்டுப் புகழின் உச்சத்திலும், தொடர் வெற்றி பாதையில் இருந்த போது தோனி தனது கேப்டன் பதவியை விட்டு வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here