பணமில்லாமல் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவிகரம் நீட்டும் சவுதி அரேபியா..!

0
2939

பாகிஸ்தான் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று இருக்கும் நிலையில், மக்களுக்கான அடிப்படையைச் சேவைகளை அளிக்கக் கூடப் பணம் இல்லாமல் தவித்து வருகிறது. இதனால் அரசிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் விற்று நிதி திரட்டி வரும் நிலையில் சவுதி அரேபியா உதவிகரம் நீட்டியுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா ஒரு வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் நிதியுதவியும், கூடுதல் 3 பில்லியன் டாலர் நிதியைக் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியுதவி பாகிஸ்தான் நாட்டின் நடப்பு நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த உதவும்.

பாகிஸ்தான் நாட்டிற்குச் சவுதி 6 பில்லியன் டாலர் நிதி அளிக்கும் காரணத்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் நிதி குறையும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு சவுதி முதலீட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பாகிஸ்தான் நாட்டின் புதிய அதிபர் இம்ரான் கான் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்தான்புல் தூதரகத்தில் சுவுதி எழுத்தாளர் இறந்துள்ளதை கண்டித்து இந்த முக்கியமான கூட்டத்திற்கு கலந்துக்கொள்ளாமல் பல தலைவர்கள் புறக்கணித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here