சவுதி ஊழல்வாதிகளை அலற விட்ட தண்டனை… புதிய இந்தியாவில் வந்தால் என்ன ஆகும்?

0
194

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பிறப்பித்த உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரத்தில் அரச குடும்ப வாரிசுகள், அமைச்சர்கள், முன்னணி தொழிலதிபர்கள், அதிகாரிகள் என மொத்தம் 2௦௦ பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ரிட்ஸ், கார்ட்லான் பகுதிகளில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் விடுதலைக்காக சவுதி இளவரசர் ஒரே ஒரு நிபந்தனையை மட்டுமே விதித்துள்ளார். அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் அந்த நிபந்தனையை ஏற்றுகொண்டு விடுதலையாகி வெளியில் வர கைதிகள் பலரும் தயாராக இல்லையாம். அப்படி என்ன நிபந்தனை என்று கேட்கிறீர்களா?

அது என்ன நிபந்தனை என்றால்…
விடுதலை பெற விரும்பும் கைதிகள் தங்களது மொத்த தனிநபர் சொத்தில் 7௦ சதவீதத்தை அரசுக்கு வழங்கிட வேண்டும் என இளவரசர் சல்மான் கட்டளை இட்டுள்ளார். இது ஊழல் குற்றம் புரிந்ததற்கான அபராதம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் பெரும்பாலானோர் அரச குடும்பத்தினர் என்பதால் சவுதியில் இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் யாரும் அரசுக்கு எதிராக வழக்கு நடத்தவோ அல்லது சிறைக்குச் செல்லவோ விரும்ப மாட்டார்கள்.

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் 7௦ சதவீதம் என்பதில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படலாம். சவுதி இளவரசர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை உள்நாட்டு ஊடகங்கள் பாராட்டி எழுதி, பேசி வருகின்றன. உலக நாடுகளும் சவுதி அரசின் செயல்பாடுகளைக் கண்டு வியந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here