பாத்ரூமில் விழுந்த அக்காவை கைத்தாங்கலாக அழைத்துவந்தேன்: சசிகலாவின் வாக்குமூலம்!

0
48034

ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் நோக்கத்துடன் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் சீறி செயலாற்றி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக், இளவரசி, விவேக், போயஸ் இல்ல டிரைவர் ஐயப்பன், உதவியாளர் பூங்குன்றன், அப்போலோவில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்பட அனைவரிடமும் விசாரணை நடந்தது.

55 பக்க வாக்குமூலம்:
சசிகலாவும் விசாரிக்கப்படுகிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்றும், எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து பிராமனப்பத்திரம் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த மனுவை ஆறுமுகச்சாமி நிராகரித்துவிட, தற்போது சசிகலாவிடம் இருந்து 55 பக்கங்கள் கொண்ட பிராமணப் பத்திரத்தில் வாக்குமூலத்தை எழுதி வாங்கி அதை சீல் வைத்த கவரில் அடைத்து விசாரணை கமிஷனில் சமர்ப்பித்து இருக்கிறார் சசிகலாவின் வழக்கறிஞரான அரவிந்தன்.

ஜெயலலிதாவிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விடயங்கள்!பாத்ரூமில் விழுந்தார்:
கடந்த 2016ம் ஆண்டு இரவு போயஸ் கார்டன் இல்லத்தில் முதல் தளத்தில் உள்ள பாத்ரூமில் ஜெயலலிதா தடுத்தி விழுந்தார். அவரை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்துவந்தேன். அப்போது ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர் சிவக்குமார் சோதித்துள்ளார். அவரே அப்போலோ மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். அடுத்த 15 நிமிடங்களில் மருந்துவமனை நிர்வாகம் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here