சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் காலமானார்!

0
1925

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அறுவை சிகிச்சை:
சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடராஜன். சில மாதங்களுக்கு முன்பும் கூட இவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு பொங்கல் விழாவிலும் கூட அவரால் கலந்துகொள்ளமுடியவில்லை. நோய் தொற்றின் காரணமாக கடந்த 2 நாட்களாக அவர் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார்.

தவித்த சசிகலா:
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, தனது கணவர் நோய்வாய்ப் பட்டிருப்பதாக கூறி பல முறைகள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் சிறைக்குள் நடந்துகொண்ட விதம் பற்றிய சர்ச்சைகள் எழுந்ததால் அவ்வளவு எளிதாக அவரால் பரோல் வாங்க இயலவில்லை.

அரசியலில் இருந்து விலகுவதாக ஜெ. எழுதிய '7 கடிதங்கள்'... பரபரப்பு தகவல்கள்!திடீர் நெஞ்சுவலி:
கடந்த சனிக்கிழமை அன்று இரவு திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின என்றாலும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் கூறியது.

உயிர் பிரிந்தது:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜனை பல்வேறு அரசியல் கட்சியினரும் பார்த்து வந்தார்கள். மேலும் இவரது சொந்த ஊரான விளாரில் இருந்து ஏராளமான சொந்தபந்தங்களும், நண்பர்களும் அவரை பார்க்க மருத்துவமனையில் குவிந்த வண்ணம் இருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:30 மணி அளவில் மருத்துவமனையிலேயே நடராஜனின் உயிர் பிரிந்தது.

முதல்வர் கனவில் மிதந்த நடராஜனை நாடு கடத்திய ஜெயலலிதா!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here