ஜெ. நினைவு நாளன்று பெங்களூரு சிறையில் சசிகலா என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா?

0
65962

சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பது அறிந்ததே. கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு செயலிழந்ததால் தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. கணவரை சந்திப்பதற்காக அவருக்கு பரோல் வழங்கப்பட்டு அவரை சந்தித்தார்.

அதே போல தற்போது ஜெயலலிதா நினைவு நாளுக்கு பரோலில் வரவாய்ப்புள்ளதா என தனத வழக்கறிஞர் மூலம் விசாரித்துள்ளார். ஆனால் ரத்த சம்மந்தம் உடையவர்களுக்கு மட்டுமே அப்படி அனுமதி வழங்க சட்டத்தில் இடம் உள்ளதால் மனு தள்ளுபடியாகும் என்பதால் அதை கைவிட்டார். அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி மூலமாக ஜெயலலிதா புகைப்படம் ஒன்று சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டது.

ஜெயலலிதா புகைப்படத்தில் கண்ணாடி இருக்கக் கூடாது என்பதால் லெமினேட் செய்யப்பட்ட புகைப்படம் சிறைக்குள் அதிகாரிகளின் உத்தரவின்படி அனுமதிக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவு நாளான நேற்று அதிகாலையில் எழுந்து தயராகிவிட்டு புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பிறகு சுமார் 1 மணி நேரம் ஆழ்ந்த தியானம் செய்துள்ளார். தியானம் முடிந்து கதறி அழுதுள்ளார் சசிகலா. அக்கா இறந்து ஒருவருடம் ஆனது நம்ப முடியாவில்லை, அவர் என்னுடனே இருப்பது போல உணர்கிறேன் என்றாராம்.

அதுமட்டுமில்லாமல் இளவரிசியின் மகன் விவேக்கை அழைத்து எதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று அன்றைய சாப்பாட்டு செலவை ஏற்றுக்கொண்டு உணவு கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி விவேக் மற்றும் அவரது மனைவி கீர்த்தனாவும் நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று மதியம் மற்றும் இரவு உணவுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உணவு கொடுத்துள்ளார்.

ஜெ. இறந்த நாளன்று நீங்கள் இந்த 3 விஷயங்களை கவனித்தீர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here