அடுத்தடுத்த சாதனை.. பட்டையைக் கிளப்பும் சர்கார்..!

0
2309

தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படம் திருடப்பட்டது எனவும், இல்லை இது ஒரு நிகழ்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை என்றும் கருத்து நிலவி வரும் இதே வேலையில் சர்கார் படம் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறது.

கதை திருட்டுப் பிரச்சனை ஒரு பக்கம் இருந்து வந்தாலும் தீபாவளி அன்று சர்கார் படம் வெளியாக அனைத்து பணிகளையும் தயாரிப்பாளர்கள் செய்து வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் குறையாமல் காத்துக்கிடக்கின்றனர்.

ஏற்கனவே படம் வசூல், டிஸ்ட்ரிபியூஷன் விலை எனப் பல சாதனைகள் படைத்துள்ள நிலையில் தற்போது புதிதாக 2 சாதனைகளைப் படித்துள்ளது விஜய்யின் சர்கார்.

கேரள சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் செய்திராத வகையில், திரிசூரில் இருக்கும் கார்திகா தியேட்டர் சர்கார் படத்தை 24 மணிநேரமும் திரையிட திட்டமிட்டுள்ளது. காலை 5 மணி காட்சி முதல் நள்ளிரவு 2.45 காட்சி வரை என நாள் முழுவதும் படத்தைத் திரையிட உள்ளதாக அறிவித்துள்ளது.

அதேபோல் தமிழ் சினிமாவில் இதுவரை எந்தப் படத்திற்கும் வெளியாடாத வகையில், 5 கண்டங்களில் சுமார் 80 நாடுகள் என வெளிநாட்டில் மட்டும் 1200 வெளிநாட்டுத் தியேட்டர்களில் சர்கார் திரையிடப்படுகிறது.

இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையைப் பெற்றது A&P குரூப் மற்றும் டி போகஸ் ஆகிய நிறுவனங்கள் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here